இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெறும். இது லீக் தொடர்களில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களின் ஒன்றாகும். 2021-2022-ம் ஆண்டுகளுக்கான பிக் பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல், வெறும் 64 பந்துகளில் 154* ரன்கள் எடுத்து பிக் பாஷ் லீகில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்திருக்கிறார்.


2021-2022-ம் ஆண்டுகளுக்கான பிக் பாஷ் லீக் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரின் இறுதிப்போட்டி ஜனவரி 28-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், மேத்யூ வாடே தலைமையிலான ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் மோதி வருகின்றன.


இதில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதனை அடுத்து, பேட்டிங் தொடங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக க்ளென் மேக்ஸ்வெலும், ஜியோ க்ளார்க்கும் ஓப்பனிங் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய க்ளென் மேக்ஸ்வெல், 22 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசினார். இதனால், வெறும் 64 பந்துகளில் 154* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ரெக்கார்டு படைத்திருக்கிறார். ஜோ க்ளார்க் அவுட்டானதை அடுத்து, அடுத்து களமிறங்கிய பேட்டர்களில், ஸ்டோய்னஸ் 75* ரன்கள் எடுத்து ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருக்கிறது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி. 






பிக் பாஷ் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு இன்னிங்ஸில் தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். அதுமட்டுமின்றி, மேக்ஸ்வெல், ஸ்டோய்னஸின் அதிரடியால்,  பிக் பாஷ் தொடரில் மொல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டி இருக்கிறது. 






பிக் பாஸ் கிரிக்கெட் வரலாற்றில், மேக்ஸ்வெல் அடித்த 154* ரனக்ளுக்கு அடுத்தபடியாக, 2020-ம் ஆண்டு ஸ்டாய்னஸ் அடித்த 147*(79) ரன்களும், மேத்யூ வாடே அடித்த 130*(61) ரன்களும் இடம் பிடித்திருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண