சிட்னியில் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இன் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் நீக்கம்:
ரோகித் அணிக்காக தான் இந்த முடிவை எடுத்ததாக பும்ரா இந்த போட்டியின் டாஸின் போது தெரிவித்தார். இந்த போட்டிக்கு முன்பாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்ப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் , கம்பீரின் முடிவால் ரோஹித் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல், ஆனால் ரோகித்தை அணியில் இருந்து நீக்க மேலிடமான பிசிசிஐ-யில் உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது
கம்பீரின் முடிவுமட்டுமல்ல:
இது குறித்து செய்தொஇ ஊடகத்தின் அறிக்கையில், சிட்னி டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கும் முடிவு கவுதம் கம்பீரின் முடிவு மட்டுமல்ல, இந்த முடிவில் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் முடிவு என்றும் கூறப்படுகிறது. ரோகித்தின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகள் சந்தித்து வருகிறது. மேலும் மெல்போர்னில் விளையாடிய நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதையும் படிங்க: IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
அகர்கர் எடுத்த முடிவு:
தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் ஆலோசனைக்குப் பிறகு, ரோகித்தை அணியில் இருந்து நீக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவில், மீதமுள்ள தேர்வுக் குழுவினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் விளையாட விரும்புவதாக தேர்வு குழுவினர் மற்றும் பயிற்சியாளரிடம் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கவுதம் கம்பீர் ஷுப்மன் கில்லை மீண்டும் அணியில் சேர்க்க முடிவு செய்தார். கில் மெல்போர்னில் நடைபெற்ற தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: Watch video: பண்ட் அடித்த சிக்சர்.. காணாமல் போன பந்து ஏணி போட்டு தேடி எடுத்த சம்பவம் வைரல் வீடியோ
மோசமான ஃபார்மில் ரோகித்:
ரோஹித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்று போட்டிகளில் விளையாடினார், அதில் அவரது பேட்டிங் படுமோசமாக இருந்தது,. மூன்று போட்டிகளில் விளையாடிய ரோகித் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 10 ரன்கள் ஆகும்.