உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,379 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 11,007 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,71,830 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இந்தியாவின் முதன்மையான முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி 2021-22 ம் ஆண்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதேபோல், 2021-22 சீசனுக்கான கர்னல் சி கே நாயுடு டிராபி மற்றும் சீனியர் மகளிர் டி20 லீக் ஆகிய தொடர்களுக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ரஞ்சி டிராபி 201-22 சீசன் ஜனவரி 13 ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் மாறுபாடு காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ரஞ்சி போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு, மும்பை மற்றும் பெங்கால் ரஞ்சி முகாம்களின் சில வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து,மும்பையின் ஆல்-ரவுண்டர் சிவம் துபே மற்றும் அணியின் வீடியோ ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், பெங்கால் ரஞ்சி முகாமின் 6 வீரர்கள் மற்றும் ஒரு பணியாளர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வீரர்கள் விவரம் பின்வருமாறு: அனுஸ்துப் மஜும்தார், சுதீப் சாட்டர்ஜி, காசி ஜுனைத் சைஃபி, கீத் பூரி, பிரதீப்தா பிரமானிக் மற்றும் சுர்ஜித் யாதவ் மற்றும் உதவி பயிற்சியாளர் சௌராசிஷ் லஹிரி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்