"நாட் பேட் ரிஷப்," என்று உலக கிரிக்கெட் ரசிகர் பட்டாளமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் காயமடைந்த அவர், தனது உடல்நிலை குறித்த மற்றொரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். டிசம்பர் கடைசியில் அடிபட்ட அவர் இதுவரை ஏறக்குறைய 6 மாத கிரிக்கெட்டைத் தவறவிட்ட பிறகு, முழு உடற்தகுதியை நோக்கி பெரும் முன்னெடுப்புகளை எடுத்துள்ள ரிஷப் பந்த், இந்தியா நடத்த உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் தனது கம்பேக்கை நிகழ்த்த ஆர்வமாக உள்ளார். டிசம்பர் 30 அன்று ஒரு பயங்கரமான கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய டெல்லி கேபிடல்ஸ் (டிசி) கேப்டனான அவர், 2023 சீசன் முழுவதையும் இழந்தார்.
வேகமாக குணமடையும் பண்ட்
சமீபத்திய அப்டேட்டுகள்படி, பந்த் எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைந்து வருகிறார் என்று தெரிகிறது. அதோடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவர் மீண்டும் களத்திற்கு வருவதற்கான மறுவாழ்வு பயிற்சிகளையும் தொடங்குவதற்கான ஆயத்த நிலையில் இருப்பதாக தெரிகிறது. கார் விபத்துக்குப் பிறகு முதல் முறையாக ஊன்றுகோல் இல்லாமல் அவர் நடப்பது போன்ற வீடியோ சமீபத்தில் வெளிவந்தது. கடந்த மாதம் இந்தியா க்ளோவ்மேன் பகிர்ந்த அந்த வைரல் வீடியோவில், பண்ட் தனது ஊன்றுகோலை தூக்கி எறிந்தார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.
உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் பிசிசிஐ
விரைவாக குணமடைந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதன் மூலம் பண்ட் பிசிசிஐயை கவர்ந்ததாக தெரிகிறது. ESPNcricinfo அறிக்கையின்படி, இந்த ஆண்டு ODI உலகக் கோப்பைக்கு பண்டை தயார்படுத்த பிசிசிஐ முயற்சிப்பதாக தெரகிறது. பிசியோ எஸ் ரஜினிகாந்தின் வழிகாட்டுதலின் கீழ், கீழ்-உடல் மற்றும் மேல்-உடல் இயக்கப் பயிற்சிகளை செய்து வருகிறார். ரஜினிகாந்த் கடந்த காலங்களில் பல இந்திய வீரர்களுக்கு பெருமளவு உதவியுள்ளார். அதோடு டெல்லி கேப்பிடல்ஸிலும் பணியாற்றியுள்ளார். அந்த பிரபல பிசியோ ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முரளி விஜய் போன்றவர்கள், அவர்கள் மறுவாழ்வில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு உதவியுள்ளார். என்சிஏவில் பிசியோவாக இருக்கும் துளசி ராம் யுவராஜ், மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு பண்ட் குணமடைவதை கண்காணித்து வருகிறார்.
NCA வில் பண்ட்
NCA வில் இளம் கிரிக்கெட் வீரர்களிடையே கிரிக்கெட் நுணுக்கங்களை பேசும் அமர்வுகளையும் பண்ட் கவனித்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கூறிய அமர்வுகள் NCA தலைவர் VVS லக்ஷ்மனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 25 வயதான பண்ட் கடைசியாக டிசம்பரில் ஆசிய ஜாம்பவான்கள் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியாவுக்காக விளையாடினார். கார் விபத்துக்குப் பிறகு பண்ட் ஐபிஎல் 2023, பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஆகிய பெரும் தொடர்களை தவறவிட்டார். டெல்லி அணியும், இந்திய அணியும் அவரை பல தருணங்களில் மிஸ் செய்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கடுமையாக மிஸ் செய்ததை நாம் அனைவரும் அறிவோம். இந்திய இளம் வீரர் இந்திய அணிக்காக 33 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.