இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் மற்றும் உடற்தகுதி குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


முகமது ஷமி:


பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியில் முகமது ஷமி இணைவது குறித்து பல வாரங்களாக ஊகங்கள் பரவி வருகின்றன. தற்போது பிசிசிஐ அவரது உடல் தகுதி குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, முகமது ஷமியின் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.


இதையும் படிங்க: "மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!


ஷமி கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். அது நடந்து ஒரு வருடம் கடந்துவிட்டது, எனவே ஷமியின் வருகைக்காக டீம் இந்தியாவும் இந்திய ரசிகர்களும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.


மருத்துவ அறிக்கை:


இந்த நிலையில் முகமது ஷமியின் உடல் நலம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷமியின் வலது குதிகால் காயம் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், ஆனால் இடது முழங்காலில் சிறிது வீக்கம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது  கம்பேக்கை பொறுத்த வரையில், ஷமி தற்போது தனது பலத்தை மேம்படுத்துவதிலும், மருத்துவர்களுடன் சேர்ந்து தனது காயத்தில் முழுமையாக மீள்வதில் இருந்து  கவனம் செலுத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.


இதையும் படிங்க: Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்?


அவர் பிசிசிஐ சிறப்பு மையத்தில்( NCA) முழு உடற்தகுதி நிலையை அடைய முயற்சிக்கிறார், அவர் முழு உடல் தகுதியை அடைவதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட பந்துவீச்சு ஸ்பெல்களை வீசுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க  முடியும். 


ஆஸி தொடரில் விலகல்?


தற்போது, ​​ 2024-25க்கான விஜய் ஹசாரே டிராபி நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் அணிக்கு ஷமி திரும்புவதும் அவரது முழங்காலில் உள்ள வீக்கத்தின் நிலையைப் பொறுத்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி சேர்க்கப்பட மாட்டார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் ஷமி தவறவிடலாம் என்று சொன்னால் தவறில்லை.


ஒரு வருடத்திற்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை


முகமது ஷமி 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். , ஆனால் உலகக் கோப்பையிலேயே கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி காயத்துக்கான சிகிச்சை பெற்றார். இருப்பினும், ரஞ்சி டிராபி 2024-25 சீசனில் அவர் மீண்டும் பெங்கால் அணிக்கு திரும்பினார். சையது முஷ்டாக் அலி டிராபியில் பெங்கால் அணிக்காக 9 போட்டிகளிலும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.