இந்திய அணியின் தொடர் தோல்விகள்:


தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை அடுத்தடுத்து வென்று அசத்தியது. அதன்பிறகு சுமார் 12 ஆண்டுகள் ஆகியும் இந்திய அணி, ஒருமுறை கூட, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலும், அரையிறுதியுடன் இந்திய அணி நடையை கட்டியது. அதைதொடர்ந்து வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரிலும், இந்திய அணியை தோல்வியை தழுவியது. இதனால் ரசிகரகள் கடும் அதிருப்தி அடைய, பிசிசிஐயின் தேர்வுக்குழு மொத்தமாக கலைக்கப்பட்டது.


பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம்:


இந்நிலையில் தான் நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதுதொடர்பாகவும், இந்திய கிரிக்கெட் அணியில் செய்ய வேண்டிய பல்வேறு மாற்றங்கள் தொடர்பாகவும், மும்பையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தலைமையிலான இந்த கூட்டத்தில், செயலாளர் ஜெய் ஷா, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிடோர் பங்கேற்றனர். 






கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகக் கோப்பை 2023க்கான ரோட் மேப், வீரர்களின் இருப்பு, பணிச்சுமை மேலாண்மை மற்றும் மற்றும் வீரர்களின் உடற்தகுதி ஆகியவை விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 


 


முக்கிய பரிந்துரைகள் -



  • 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது 

  • 2023ல் இந்தியா விளையாடும் அடுத்த 35 ஒருநாள் போட்டிகளுக்கு 20 வீரர்களும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவர் 

  • மல்டி ஃபார்மட் பிளேயர்களுக்கு, முக்கியமாக ஃபிட்னஸில் கவனம் செலுத்தப்படும் 

  • விவிஎஸ் லக்ஷ்மண் தலைமையிலான தேசிய கிரிக்கெட் அகாடெமியை சேர்ந்த வீரர்களின் உடற்தகுதியைக் கண்காணிக்க ஐபிஎல் உரிமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது


2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர்வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இறுதி 15 பேர் கொண்ட அணி உலகக்கோபை தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.