இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு சீசன் (2023-24) அட்டவணையை வெளியிட்டது. இந்த சீசனானது வருகிற ஜூன் 2023 மற்றும் மார்ச் 2024 கடைசி வாரம் வரை மொத்தம் 1846 போட்டிகள் நடைபெற இருக்கிறது.
வரையறுக்கப்பட்ட இந்த அட்டவணையில் துலிப் டிராபியுடன் தொடங்குகிறது. துலிப் டிராபியானது ஜூன் 28ம் தேதி தொடங்கி, ஜூலை 16 வரை நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து பேராசிரியர் தியோதர் டிராபியானது ஜூலை 24, 2023 முதல் ஆகஸ்ட் 03, 2023 வரை விளையாடப்பட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் மத்திய, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு என்ற ஆறு அணிகளாக விளையாட இருக்கின்றனர்.
இதையடுத்து, இரானி கோப்பையும் வருகின்ற அக்டோபர் 01, 2023 அன்று தொடங்க இருக்கிறது. சையத் முஷ்டாக் அலி டிராபி அக்டோபர் 16, 2023 இல் தொடங்கி நவம்பர் 06, 2023 வரையும், விஜய் ஹசாரே டிராபி நவம்பர் 23, 2023 முதல் டிசம்பர் 15, 2023 வரை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களிலும், 38 அணிகளாகப் பிரிக்கப்படும். ஏழு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் மற்றும் எட்டு அணிகள் கொண்ட மூன்று குழுக்களாக விளையாடப்பட இருக்கின்றனர்.
கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி - ஜனவரி 05, 2024 முதல் மார்ச் 14, 2024 வரை நடைபெறுகிறது. 38 அணிகள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும், இதில் நான்கு எலைட் குழுக்கள் 8 கொண்டிருக்கும். தலா அணிகள் மற்றும் பிளேட் குழு 6 அணிகளைக் கொண்டிருக்கும். எலைட் குழுவில் உள்ள அணிகள் தலா 7 லீக்-நிலை ஆட்டங்களில் விளையாடும் மற்றும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் குழுவில் உள்ள ஆறு அணிகள் தலா ஐந்து லீக்-நிலை ஆட்டங்களில் விளையாடும், முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
பெண்கள் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் சீனியர் மகளிர் டி20 டிராபியானது அக்டோபர் 19, 2023 முதல் நவம்பர் 09, 2023 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, சீனியர் மகளிர் மண்டலங்களுக்கு இடையேயான கோப்பை - நவம்பர் 24, 2023 முதல் டிசம்பர் 04, 2023 வரை விளையாடப்பட இருக்கிறது. 2024 ஜனவரி 04, 2024 அன்று தொடங்கும் சீனியர் மகளிர் ஒரு நாள் டிராபி தொடங்கப்பட்டு, ஜனவரி 26, 2024 இறுதிப் போட்டியுடன் முடிவடைய இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.