ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற உலககோப்பை டி20 போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும், மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வங்காளதேச அணியினர் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 7வது ஓவரில் லிட்டன் தாஸ் அக்‌ஷர் படேல் பந்தில் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு ஓடுவார். அப்போது, பவுண்டரி எல்லையில் இருந்து பந்தை எடுத்த அர்ஷ்தீப்சிங் அதை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் எறிவார்.


அப்போது, இடையில் நிற்கும் விராட்கோலி பந்தை தான் பிடித்த எறிவது போல செய்கை செய்வார். ஆனால், விராட்கோலிக்கும பந்துக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது. இந்த சம்பவத்தில் அந்த ஓவரில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 






இந்த நிலையில், வங்காளதேச அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் நூருல் ஹாசன் இந்திய வீரர் விராட்கோலி மீது குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த நூருல் ஹாசன், நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு போலி வீசுதல் இருந்தது. அது ஐந்து ரன்கள் பெனால்டியாக இருக்கலாம். அது ஆட்டத்தை நம் வழியில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றார்.


தற்போது அந்த வீடியோவை வங்காளதேச கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி, இது போலி ஃபீல்டிங்க இல்லையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு ரசிகர் ஐ.சி.சி. வெட்கக்கேடு என்று பதிவிட்டு ஐ.சி.சி. – இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் என்று பதிவிட்டுள்ளார்.


நூருல் ஹாசன் கூறியிருப்பது போல, சர்வதேச கிரிக்கெட் விதிப்படி 41.5ன் படி, பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல், ஏமாற்றும் வேலை அல்லது இடையூறு செய்தால் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும் என்று விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதியை மேற்கோள் காட்டியே நூருல் 5 ரன்கள் பெனால்டியை எதிர்பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Dinesh Karthik Run Out: விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் சர்ச்சை - நடுவரை விமர்சித்த இந்திய ரசிகர்கள்


மேலும் படிக்க : Virat Kohli Record: ஒரே போட்டியில் சச்சினின் இரண்டு ரெக்காரட்டுகளை எட்டி பிடித்த விராட் கோலி.. என்ன சாதனை தெரியுமா.. ?