அடுத்தடுத்து தோல்வி:


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். தொடர்ந்து ஷாகீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் என பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வந்தது.






இதனால் கேப்டனாக பாபர் அசாமுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவி வெளியேறியதை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார்.


கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பாபர் அசாம்:


இந்நிலையில், தற்போது ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் பாபர் அசாம் விலகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒராண்டு இடைவெளியில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து இரண்டு முறை விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வடிவிலான கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். அதையடுத்து ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும், ஷாகீன் அப்ரிடி டி20 கேப்டனாகவும் பொறுப்பேற்றனர்.


கடந்த மார்ச் மாதம் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ஷாகீன் அப்ரிடி விலகியதை அடுத்து ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்தார். பாபர் அசாம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளேன்.


இதுகுறித்து கடந்த மாதமே, பிசிபி நிர்வாகத்திற்கும், அணி நிர்வாகத்திற்கும் கூறிவிட்டேன். இந்த அணியை வழிநடத்தியது பெருமையளிக்கும் விஷயம். ஆனால் இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் சூழலில் உள்ளேன். கேப்டனாக இருக்கும் போது வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் இனி பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். அதேபோல் எனது ரோலில் தெளிவு கிடைக்கும் என்பதோடு, சொந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவுள்ளேன். இதுவரை இணைந்து செய்த சாதனைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். இனி வீரராக பயணிக்க ஆவலாக உள்ளேன்"என்று கூறியுள்ளார்.