கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனையை அவர் வைத்திருக்கிறார், தனது வாழ்க்கையில் 195 முறை ஒரு பேட்ஸ்மேனை ஸ்டம்பிங் செய்து அவுட் செய்தார். 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஸ்டம்பிங், விக்கெட் கீப்பராக தோனியின் ஸ்டாம்பிங் அவர் எந்த அளவுக்கு வேகமானவர் என்று நினைவூட்டும். அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி, எம்.எஸ். தோனியை ஒரு மேதை என்று அழைத்தார்.

2016 ஆம் ஆண்டு நடந்த போட்டி:

இது ஜனவரி 29, 2016 அன்று மெல்போர்னில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான ஒரு டி20 போட்டியின் நடந்த சம்பாவமாகும். ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் என்ற இலக்கைத் சேசிங் செய்துக் கொண்டிருந்தது. ஜேம்ஸ் பால்க்னர் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து 10 ரன்கள் எடுத்திருந்தார். ரவீந்திர ஜடேஜா 17வது ஓவரில் பந்து வீச வந்தார், அதன் கடைசி பந்தில் பந்து பால்க்னரின் பேட்டின் உள் விளிம்பை எட்டியது, அதன் பிறகு பந்து தோனியின் பேடைத் தாக்கி ஸ்டம்புகளில் பட்டது. தோனியின் கண்கள் மிகவும் கூர்மையாக இருந்ததால், பால்க்னரின் கால் காற்றில் உயர்ந்து வருவதைக் கண்டவுடன் அவர் ஸ்டம்புகளை தட்டிவிட்டார், பால்க்னர் அப்போது அவுட்டானர்.

தோனி ஒரு மேதை...

பந்து ஜேம்ஸ் பால்க்னரின் பேட்டின் விளிம்பில் பட்டது, பின்னர் தோனியின் பேடுகளைத் தாக்கியது, பின்னர் ஸ்டம்புகளைத் தாக்கியது. இவை அனைத்தும் தற்செயலாக நடந்ததாகத் தெரிகிறது, ஏனெனில் முழு சம்பவமும் ஒரு நொடியில் நடந்தது. இருப்பினும், தோனி உண்மையில் பந்து ஸ்டம்புகளைத் தாக்க வேண்டும் என்று விரும்பினார் என்று அலெக்ஸ் கேரி தெரிவித்தார்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு வீடியோ கிளிப்பில், அலெக்ஸ் கேரி, "தோனி ஒரு மேதை என்பதால் இதைச் செய்ய விரும்பியிருக்கலாம். அவர் வேண்டுமென்றே இதைச் செய்தார், ஏனென்றால் அவர் எம்.எஸ். தோனி." என்று கூறினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.