ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 31ஆவது ஆட்டம் தொடங்கவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், அயர்லாந்தும் மோதுகின்றன.


அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


ஆன்ட்ரூ பால்பிரின் தலைமையிலான அயர்லாந்து அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. முதலில் களம் இறங்கவுள்ள ஆஸ்திரேலியா அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது.
அடுத்ததாக கடந்த 25ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையுடனான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.


முன்னதாக,


ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முக்கியமான போட்டி மழையால் கைவிடப்பட்டதன் மூலம் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன. இதன் மூலம் அவர்கள் இருவரும் அரையிறுதிக்குள் நுழைய, கடைசி இரண்டு போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டியவைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


குரூப் 'ஏ':


இந்த குரூப் 'ஏ' வில் எல்லா அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில், 5 புள்ளிகளுடன், நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணி ஆடிய மூன்றில் இரண்டு போட்டிகள் மழையால் தடைபட்டு, ஒரே ஒரு போட்டியையும் இழந்து இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று கடைசி அதற்கு முந்தைய இடத்தில் உள்ளது.


ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இரு அணிகளும் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளன. முதல் இரண்டு இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பிடிக்க மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. ஆனால் இதில் ஆஸ்திரேலியா அடுத்ததாக விளையாட இருக்கும் அணிகள் அயர்லாந்தும், ஆப்கனிஸ்தானும். இரு அணிகளும் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய திறன் உள்ள அணிகள்தான், ஒரு வேளை அயர்லாந்து வென்றால் அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசிக்கும். அனைத்து அணிகளும் எப்படி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதை பார்க்கலாம்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!



நியூசிலாந்து


மூன்று போட்டிகளில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே, குரூப் 1-ல் முதலிடம் வகிக்கும் அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். ஏனெனில் அவர்களது நெட் ரன் ரேட் அந்த அளவுக்கு பிரகாசமாக உள்ளது.


இங்கிலாந்து


இங்கிலாந்து தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றாலும் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளும் அதே புள்ளிகளைதான் பெற்றுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் நியூசிலாந்து மற்றும் இலங்கையுடன் இருப்பதால், இரு அணிகளுமே பெரும் சவாலாக இருக்கும்.


அயர்லாந்து


அயர்லாந்து தற்போது குரூப் 1ல் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று நல்ல நெட் ரன் ரேட் பெற்றால் மட்டுமே முன்னேற முடியும்.


ஆஸ்திரேலியா


நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது. அயர்லாந்தை விட பின்தங்கி இருக்கும் ஆஸ்திரேலியா எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 


இந்த மூன்று அணிகளுமே மற்ற இரண்டு அணிகள் ஏதாவது ஒரு போட்டியில் தோற்று இவர்கள் இரண்டையும் வென்றால் உடனடியாக தகுதி பெறும் வாய்ப்பு உண்டு.