Australia Vs Afghanistan Score LIVE: முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து.. 15 ரன்களில் பேர்ஸ்டோவ் காலி..!

AUS vs AFG Live Score: ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 08 Nov 2023 02:39 PM
Australia Vs Afghanistan Score LIVE: அரைசதம் கடந்தார் டேவிட் மலான்..!

நெதர்லாந்திற்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் 36 பந்துகளில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார் டேவிட் மலான்.

Australia Vs Afghanistan Score LIVE: 8 வது ஓவரில் 3 பவுண்டரிகள்.. அடுத்தடுத்து ஓடவிட்ட டேவிட் மலான்..!

லோகன் வான் பீக் வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை ஓடவிட்டார் டேவிட் மலான்.

Australia Vs Afghanistan Score LIVE: முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து.. 15 ரன்களில் பேர்ஸ்டோவ் காலி..!

17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த பேர்ஸ்டோவ், ஆர்யன் வீசிய பந்தில் வன் மீக்ரனிடம் கேட்சானார். 

Australia Vs Afghanistan Score LIVE: ஒற்றை ஆளாக போராட்டம்.. சதத்தை பூர்த்தி செய்தார் மேக்ஸ்வெல்..!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் மேக்ஸ்வெல். 

Australia Vs Afghanistan Score LIVE: நூர் அஹமது பந்தை அடுத்தடுத்து சிக்ஸருக்கு பறக்கவிட்ட மேக்ஸ்வெல்..!

நூர் அஹமது வீசிய 29வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் மேக்ஸ்வெல்.

Australia Vs Afghanistan Score LIVE: 60 ரன்களுடன் ஆப்கானிஸ்தானை ஆட்டிபடைக்கும் மேக்ஸ்வெல்..!

28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 

Australia Vs Afghanistan Score LIVE: அடித்து ஆட தொடங்கும் மேக்ஸ்வெல்.. ஆட்டத்தை கவிழ்க்குமா ஆப்கானிஸ்தான்..?

நூர் அஹமது வீசிய 19 வது ஓவரில் பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார். 

Australia Vs Afghanistan Score LIVE: 87 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா.. ஆஹா! பந்துவீச்சில் அசத்தும் ஆப்கான்!

7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த ஸ்டொய்னிஸ் ரஷித் கான் பந்துவீச்சில் அவுட்டாக,  87 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. 

Australia Vs Afghanistan Score LIVE: ஆஸ்திரேலிய அணிக்கு தூணாக நிற்கும் மேக்ஸ்வெல்.. துணை நிற்கும் ஸ்டொய்னிஸ்..!

21 பந்துகளில் 20 ரன்களுடனும், 6 பந்துகளில் 6 ரன்களுடனும் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல போராடி வருகின்றனர். 

Australia Vs Afghanistan Score LIVE: முடிந்த பவர்ப்ளே.. ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 52/4

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

Australia Vs Afghanistan Score LIVE: 9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி, களத்தில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும்  கிளென் மேக்ஸ்வெல் நிற்கின்றனர்.

Australia Vs Afghanistan Score LIVE: ஜோஷ் இங்கிலிஸ் அவுட்..!

ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் ஆப்கான் வீரர் அஸ்மத்துல்லா உமர்சாய் பந்தில் ஆட்டமிழந்தார்.

Australia Vs Afghanistan Score LIVE: வார்னர் அவுட்!

டேவிட் வார்னர் அவுட்டானார். 29 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் எடுத்து 18 ரன்களுடம் நடையைக்கட்டினார்.

Australia Vs Afghanistan Score LIVE: 8 ஓவர்கள் முடிவில்..

8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Australia Vs Afghanistan Score LIVE: 7 ஓவர்கள் முடிவில்!

7 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி களத்தில்,  டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே நிற்கின்றனர்.

Australia Vs Afghanistan Score LIVE: 6 ஓவர்கள் முடிவில்!

6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.

Australia Vs Afghanistan Score LIVE: மிட்செல் மார்ஸ் அவுட்!

மிட்செல் மார்ஸ் அவுட்டானார். 11 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

Australia Vs Afghanistan Score LIVE: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Australia Vs Afghanistan Score LIVE: 4 ஓவர்கள் முடிவில்..!

4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி களத்தில் டேவிட் வார்னர் 15* மற்றும் மிட்செல் மார்ஷ் 3* ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.

Australia Vs Afghanistan Score LIVE: 3 ஓவர்கள் முடிவில்..!

3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. 

Australia Vs Afghanistan Score LIVE: 2 ஓவர்கள் முடிவில்..!

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.

Australia Vs Afghanistan Score LIVE: கடைசி நேரத்தில் சரவெடி காமித்த ரஷித் கான்.. ஆஸ்திரேலிய அணிக்கு 292 ரன்கள் இலக்கு..!

கடைசி நேரத்தில் ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்துள்ளது. 

Australia Vs Afghanistan Score LIVE: உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதம்.. சாதனை படைத்த ஜத்ரன்..!

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார் இப்ராஹிம் ஜத்ரன். 

Australia Vs Afghanistan Score LIVE: 22 ரன்களில் வெளியேறிய அதிரடி பேட்ஸ்மேன் ஓமர்சாய்.. கடைசிநேர விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியா..!

18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஓமர்சாய் ஜாம்பா வீசிய பந்தில் க்ளீன் போல்டானார்.. 

Australia Vs Afghanistan Score LIVE:  40 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள்.. 90 ரன்களுடன் இப்ராஹிம் ஜத்ரன்..!

 40 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராகிம் சத்ரான் 117 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். 

Australia Vs Afghanistan Score LIVE: ஸ்டார்க் பந்தில் க்ளீன் போல்டான கேப்டன் ஷாஹிதி.. சதத்தை நோக்கி நகரும் இப்ராஹிம் ஜத்ரன்..!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஷாஹிதி, ஸ்டார்க் பந்தில் க்ளீன் போல்டானார். 

Australia Vs Afghanistan Score LIVE: கேப்டன் ஷாஹிதி 20, இப்ராஹிம் ஜத்ரன் 79 ரன்கள்.. விக்கெட்டை தேடி ஆஸ்திரேலியா..!

ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 157 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 33 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 157 ரன்கள். கேப்டன் ஷாஹிதி 20 ரன்னுடனும், இப்ராஹிம் சத்ரன் 79 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

Australia Vs Afghanistan Score LIVE: 150 ரன்களை தொட்ட ஆப்கானிஸ்தான் அணி.. ஜர்தான், கேப்டன் ஹகிதி நிதான ஆட்டம்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 31 வது ஓவரில் 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 

Australia Vs Afghanistan Score LIVE: 150 ரன்களை நோக்கி ஆப்கானிஸ்தான்.. ஜர்தான், ஹகிதி நிதான ஆட்டம்..!

30 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஜர்தான் 72 ரன்களும், ஹகிதி 13 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 

Australia Vs Afghanistan Score LIVE: 30 ரன்களில் வெளியேறிய ரஹ்மத் ஷா.. 2வது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் அணி..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா 44 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்தில் அவுட்டானார். 

Australia Vs Afghanistan Score LIVE: 100 ரன்களை தொட்ட ஆப்கானிஸ்தான்.. பேட்டிங்கில் அசத்தும் பேட்ஸ்மேன்கள்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21வது ஓவரில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 

Australia Vs Afghanistan Score LIVE: அரைசதம் கடந்த இப்ராஹிம் ஜர்தான்.. விக்கெட் எடுக்க திணறும் ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜர்தான் 63 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. 

Australia Vs Afghanistan Score LIVE: 68 ரன்களை கடந்து ஆணித்தனமான பேட்டிங்... பேட்டிங்கில் அசத்தும் ஆப்கானிஸ்தான்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. 

Australia Vs Afghanistan Score LIVE: 50 ரன்களை கடந்து ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டம்.. விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸ்திரேலியா!

11 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் எடுக்க ஆஸ்திரேலிய அணி தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

Australia Vs Afghanistan Score LIVE: ஆப்கானிஸ்தான் அணி நிதான ஆட்டம்.. 10 ஓவர்களில் 46 ரன்கள்..!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. 

Australia Vs Afghanistan Score LIVE: குர்பாஸை தூக்கிய ஆஸ்திரேலியா.. முதல் விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான்..!

25 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸ், ஹசல்வுட் வீசிய 8 வது ஓவரில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

Australia Vs Afghanistan Score LIVE: 6 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள்.. ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்கள் நிதான ஆட்டம்..!

ஆப்கானிஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான குர்பாஸ் 22 பந்துகளில் 20 ரன்களும், ஜர்தான் 14 பந்துகளில் 9 ரன்களும் எடுத்துள்ளனர். 

Australia Vs Afghanistan Score LIVE: விளையாடும் ஆஸ்திரேலியா அணி..!

ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Australia Vs Afghanistan Score LIVE: விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி..!

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமத், நூர் அஹமத்.

: Australia Vs Afghanistan Score LIVE: 4 ஓவர்களில் 20 ரன்கள்.. பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துமா ஆப்கானிஸ்தான்..?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்கள் முடிவில் 20 ரன்கள் எடுத்துள்ளது. 

Background

2023 உலகக் கோப்பையின் 39வது ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மும்பையில் நடைபெறவுள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு இரு அணிகளும் முழு அளவில் தயாராகிவிட்டன. கடைசி மூன்று போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. அதேசமயம் ஆஸ்திரேலியா தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, மும்பையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். 


ஆஸ்திரேலியா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. அவர் 10 புள்ளிகள் பெற்றுள்ளார். அணி மிகவும் வலுவானது மற்றும் ஃபார்மிலும் உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடும் லெவனில் மாற்றங்களைச் செய்யலாம். மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் விளையாடும் பதினொன்றில் இடம் பெறலாம். முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தார். ஆனால் இதன் பிறகு தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.


இந்த முறை உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த அணி 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பைக்கு வருவது இதுவே முதல் முறை. கடைசி மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் பின்னர் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களம் இறங்கவுள்ளது.


ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான சாத்தியமான வீரர்கள் -


ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்/மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.


ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.