உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே (89), ஷர்துல் தாக்கூர் (51) எடுத்து, இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.






அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பரிதாபமாக மாறியது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் 43 ரன்கள், சுப்மன் கில் 18 ரன்கள், புஜாரா 
27 ரன்கள் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் உள்ளது. களத்தில் விராட் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 20 ரன்களுடனும் இருந்தனர். 






தொடர்ந்து அரைசதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 49 ரன்களில் போலாந்து பந்தில் ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் கோட்சானார். அதே ஓவரின் அடுத்த 2வது பந்தில் உள்ளே வந்த ஜடேஜாவும் டக் அவுட்டாகி வெளியேறினார். 


தற்போது ரஹானே 31 ரன்களுடனும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் இந்திய அணியை மீட்க போராடி வருகின்றனர்.