இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2021 - 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டி மீது பெரும் ஆர்வத்தினை காட்டி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளும் எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பிரித்து மேய்ந்து வருகின்றன.


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து அவர் கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய அணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்து ஓவலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஓவல் மைதானத்தின் தன்மை டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் விராட் கோலி மாதிரியான பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமையும். அதுவும் விராட் கோலி தற்போது உள்ள ஃபார்முக்கு ஆஸ்திரேலிய பந்து வீச்சு மிகவும் பாதிக்கப்பவுள்ளது. கடந்த முறை கேப்டனாக இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை தவறவிட்ட விராட் கோலி இம்முறை கோப்பையை தவறவிடமாட்டார் என நினைக்கிறேன். இம்முறை அவரது மனநிலை முற்றிலும் வேறு விதமாக இருக்கும் என நினைக்கிறேன். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார். 




மேலும் ரோகித் சர்மா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் இடையில் ரோகித் சர்மாவின் ஃபார்ம் என்பதை பலரும் கேள்வி எழுப்பி வந்தாலும், 2022இல் ஐபிஎல் தொடரில் அவர் எடுத்த ரன்கள் 268, அதேபோல் 2023இல் அவச்ர் சேர்த்த ரன்கள் 332. ஆனால் ஐபிஎல் போன்ற 20 ஓவர் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட்க்கும் இடையிலான வித்தியாசம் என்பது முற்றிலும் வேறு. இதனால், ரோகித் டெஸ்ட் போட்டியில் வேறு மாதிரி காணப்படுவார். அதேபோல் மிகவும் துல்லியமான ஷாட்டுகளை அடித்த அவரால் 20 ஓவர் போட்டியில் மேற்கொண்டு விளையாட முடிய வில்லை. அதேபோல், டெஸ்ட் போட்டியில் அவருக்கான களம் முற்றிலும் வேறு விதமாக இருக்கும் என்பதால் ரோகித்தின் பேட்டிங் வேறுவிதமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், ரோகித் ஃபார்மில் இருக்கிறார் மற்றும் ஃபார்மில் இல்லை என்பதைக் கடந்து ரோகித் தனது மனதில் என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம்” எனவும் அவர் கூறியுள்ளார்.