சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன, இந்த போட்டியானது பாகிஸ்தானின் ராவில்பிண்டியில் நடைப்பெறவுள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி 2025: 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் குரூப் ஏ பிரிவில் ஏற்கெனவே இரண்டு அணிகள் தங்கள் அரையிறுதி வாய்ப்பு முடிவு செய்துள்ளன, அடுத்தப்படியாக குரூப் ஆஃப் டெத் என்று அழைக்கப்படும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி தங்கள் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக்கொள்ளும், 

ஆஸ்திரேலிய அணி: 

சீனியர் வீரர்கள் பலர் இல்லாமல் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்ப்பாராத வகையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தி இருந்தது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 351 என்கிற சர்வ சாதரணமாக சேஸ் செய்தது, அந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் போன்ற முன்னணி வீரர்கள் யாரும்  ரன் அடிக்காத நிலையில்  ஜோஷ் இங்கிலிஸ், மேத் ஷார்ட், அலெக்ஸ் கேரி ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சிலும்  ஆடம் ஜாம்பா, நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் சிறப்பாக செயல்ப்படுகின்றனர். 

தென் ஆப்பிரிக்கா அணி: 

தென் ஆப்பிரிக்கா அணியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பு நடைப்பெற்ற முத்தரப்பு போட்டியில் தோல்வியடைந்து இருந்தது, பெரிய அளவில் ஃபார்மில் இல்லாமல் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் இருந்தது. அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாம், ரயன் ரிக்கல்டன்ம், மார்க்ரம், டேவிட் மில்லர் என வலுவான பேட்டிங் ஆர்டரை பெற்றுள்ளது. பந்து வீச்சை பொறுத்தவரை ரபாடா, யான்சன் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், கோட்சியா, அன்ரிச் நோர்ட்ஜே இல்லாதது பின்னடைவாக உள்ளது. .

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா: நேருக்கு நேர்

ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 110 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் தென் ஆப்பிரிக்கா 55 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 51 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன, 1 போட்டி முடிவு பெறவில்லை. 

மைதானம் எப்படி?

ராவல்பிண்டி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானமாகும்,ஆனால் நேற்று வங்கதேசம் மற்றுன் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி லோ ஸ்கோரிங் போட்டியாக அமைந்தது, ஆனால் இன்றைய போட்டியில் ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு உதவும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இரு அணிகளின் பேட்டிங் வரிசையும் பலமாக உள்ளதால் இன்றைய போட்டியில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. இன்று ராவல்பிண்டியில் சிறிது மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேரடி ஒளிபரப்பு: 

NZ vs BAN போட்டி இந்தியாவில் JioHotstar செயலி மற்றும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஆடம் ஜாம்பா. 

தென்னாப்பிரிக்கா : டெம்பா பாவுமா (கேட்ச்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டூஸ்சென் வான்சென், டூஸ்சென் வான்சென்.