AUS Vs NED Score LIVE: 5 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து! இமாலய வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?

AUS Vs NED Score LIVE: ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 25 Oct 2023 07:56 PM
5 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து! இமாலய வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?

400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. 

400 ரன்கள் இலக்கை நெருங்குமா நெதர்லாந்து? 3 ஓவர்களில் 27 ரன்கள்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 400 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள நெதர்லாந்து அணி 3 ஓவர்களில் 27 ரன்களுடன் ஆடி வருகிறது.

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா; அதிரடி காட்டும் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்துவிட்டதால், அந்த அணியின் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி வருகிறார். 

சதம் அடித்த வார்னர் அவுட்; 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா - 300 ரன்களை எட்டுமா?

நெதர்லாந்து அணிக்கு எதிராக அபாரமாக ஆடி சதம் விளாசிய வார்னர் அவுட்டான நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. 

உலகக் கோப்பையில் 6 வது சதம் - ஆஸ்திரேலியாவுக்காக அசத்தும் வார்னர்

ஆஸ்திரேலிய அணிக்காக  சிறப்பாக ஆடி வரும் வார்னர் சதம் விளாசி அசத்தியுள்ளார். உலகக் கோப்பையில் அவருக்கு இது 6வது சதம் ஆகும். 

3 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா! சதத்தின் விளிம்பில் வார்னர்

ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடி லபுஷேன் 62 ரன்களில் அவுட்டானார். 

அரைசதம் கடந்தும் அசத்தும் வார்னர், ஸ்மித் - தடுமாறும் நெதர்லாந்து

ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் - ஸ்மித் ஜோடி இருவரும் அரைசதம் விளாசிய பின்னரும் தொடர்ந்து அபாரமாக ஆடி வருகின்றனர். 

100 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா! அரைசதம் விளாசிய வார்னர்!

ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்து அபாரமாக ஆடி வருகிறது. வார்னர் அபாரமாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார். 

நிதானம் காட்டும் வார்னர்; அதிரடி காட்டும் ஸ்மித்!

நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் வார்னர் நிதானமாகவும், ஸ்மித் அதிரடியாகவும் ஆடி வருகின்றனர். தற்போது வரை 90 ரன்களுக்கு 1 விக்கெட் இழப்புடன் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது. 

வார்னர் - ஸ்மித் ஜோடி நிதானம்! விக்கெட் வீழ்த்த நெதர்லாந்து மும்முரம்!

ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் - வார்னர் ஜோடி மிகவும் நிதானமாக ஆடி வருகிறது. 

9 ரன்களில் அவுட்டான மிட்செல் மார்ஷ் - முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணிக்காக நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். 

நிதானமாக ஆட்டத்தை தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா - விக்கெட்டை வீழ்த்துமா நெதர்லாந்து?

நெதர்லாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களில் 28 ரன்களை விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது. 

டாப் 4-ஐ உறுதி செய்யுமா ஆஸ்திரேலியா?

முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியுற்றாலும், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால், நான்காவது இடத்தை அந்த அணி வலுவாக உறுதி செய்யலாம்.

புள்ளிப்பட்டியல் நிலவரம்..

புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 5வது இடத்திலும், நெதர்லாந்து அணி 7வது இடத்திலும் உள்ளது.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா

நெதர்லாந்து பிளேயிங் லெவன்

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் டட், பால் வான் மீகெரென்

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

டெல்லியில் நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Background

AUS Vs NED World Cup 2023: டெல்லியில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  24வது லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது.


உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா,  ஏழாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.


ஆஸ்திரேலியா - நெதர்லாந்து மோதல்:


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  இதுவரை விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று இருப்பது அந்த அணிக்கு ஊக்கம் அளித்துள்ளது. மறுமுனையில் நெதர்லாந்து  ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. அதேநேரம், நடப்பு தொடரில் வலுவாக உள்ள தென்னாப்ரிக்காவை வீழ்த்திய ஒரே அணி என்ற நம்பிக்கையுடன் நெதர்லாந்து அணி இன்று களமிறங்குகிறது.


பலம் & பலவீனங்கள்:


இந்திய  மைதானங்களை கணிக்க முடியாமல் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவினாலும், கடைசி இரண்டு போட்டியில் மீண்டு வந்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னர் அபாரமான ஃபார்மில் உள்ளார். மற்ற வீரர்கள் நிலையாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். வேகப்பந்துவீச்சில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பினும், அவர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்படாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணிக்கு சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும், விளையாடும் அனைத்து போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்துகின்றனர். ஏதாவது ஒரு பேட்ஸ்மேனை மட்டும் நம்பி இருக்காதது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகின்றனர். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரவும் வாய்ப்புள்ளது.  


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது.


மைதானம் எப்படி?


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக அமைகிறது. குறுகிய எல்லைகளை கொண்டுள்ளதால் எளிதில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசலாம். அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அணுகூலமாக உள்ளது.  டாஸ் வென்றவர்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்து கடினமான இலக்கை நிர்ணயிக்கவே விரும்புவார்கள். 


உத்தேச அணி விவரங்கள்:


ஆஸ்திரேலியா:


மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்


நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங்/வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் ( கேப்டன்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.