2023 ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நேபாளம் மற்றும் மங்கோலியா அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. நேபாளத்துக்கு எதிரான போட்டியில் மங்கோலியா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி, டாப் அணிகள் செய்யாத பல்வேறு சாதனைகளை தனது பெயரில் பதித்தது.
நேபாள சாதனைகள்:
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி பல சாதனைகளை குவித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் தீபேந்திர சிங் ஐரி சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.
முன்னதாக, கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்து பல ஆண்டுகளாகமாக வைத்திருந்த சாதனையை, தீபேந்திரா 9 பந்துகளில் அரைசதத்தை கடந்து புதிய சாதனை படைத்தார். இது தவிர, குஷால் மல்லா இன்னிங்ஸ் விளையாடி 50 பந்துகளில் 274 ஸ்டிரைக் ரேட்டில் 137* ரன்கள் குவித்தார். மேலும், 34 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்த சாதனை படைத்தார்.
இந்தநிலையில் நேபாளம் மற்றும் மங்கோலியா இடையேயான போட்டியில் நேபாளம் அணி பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது. அது என்னவென்று இந்த செய்தியில் பார்ப்போம்..
- சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டி20 போட்டியில் 300 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை நேபாளம் அணி படைத்துள்ளது. இந்த போட்டியில் நேபாள அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்திருந்தது.
- 9 பந்துகளில் 50 ரன்களை கடந்து டி20 வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை நேபாள வீரர் தீபேந்திர சிங் படைத்துள்ளார். முன்னதாக, யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.
- 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து டி20 வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை 19 வயதே ஆன நேபாள வீரர் குஷல் மல்லா படைத்தார். முன்னதாக, தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து இருந்ததே உலக சாதனையாக இருந்தது.
- டி20 வரலாற்றில் ஒரு அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உலக சாதனையை நேபாளம் அணி தனது பெயரில் செதுக்கியது. மங்கோலியா அணி வெறும் 41 ரன்களில் ஆல்-அவுட் ஆன நிலையில் 273 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது நேபாளம்.
- தீபேந்திர சிங் ஐரி இந்த இன்னிங்ஸில் வெறும் 10 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டி20 வரலாற்றில் 500+ ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை தீபேந்திர சிங் ஐரி படைத்துள்ளார்.
ப்ளேயிங் 11:
நேபாளம் அணி :
குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), குஷால் மல்லா, ரோஹித் பவுடல் (கேப்டன்), சுந்தீப் ஜோரா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சானே, அபினாஷ் போஹாரா, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி.
மங்கோலியா அணி:
முங்குன் அல்தன்குயாக், தவாசுரென் ஜமியான்சுரன், லுவ்சன்சுண்டுய் எர்டெனெபுல்கன் (கேப்டன்), ஓட் லுட்பயர், என்க்துவ்ஷின் முன்க்பத், நம்ஸ்ராய் பாட்-யலால்ட், நயம்பதார் நரன்பாதர், என்க்-எர்டெனே ஓட்கோன்பயர் (விக்கெட் கீப்பர்), டுர் எண்டரே சுமியா, புயந்துஷிக் டெர்பிஷ், துமுர்சுக் துர்முங்க்.