Asian Games Cricket: ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில், இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகல் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


ஆசிய விளையாட்டு:


சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கிய ஆசிய விளையாட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை இந்திய வீரர் வீராங்கனைகள் 22 தங்கப் பதக்கங்கள் உட்பட 95 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது. இதனிடையே இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இந்திய ஆடவர் அணி இன்று தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. 


இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதல்:


காலிறுதிப் போட்டியில் நேபாளம் அணியயும், அரையிறுதியில் வங்கதேசம் அணியையும் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனிடையே, அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அண் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இன்று காலை இந்திய நேரப்படி 11.30 மணியளவில் நடைபெறும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.  போட்டியின் நேரலையை  சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 அல்லது சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசையில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


இந்திய அணிக்கான சாதகம்:


ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணியில் நட்சத்திர மற்றும் அனுபவம் வாய்ந்த விரர்கள் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது, குறிப்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி உள்ளனர். அவர்களை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி பதக்கத்த வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதன் காரணமாக இன்று நடைபெறும் இறுதிப்போட்டிய்ல் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியபடி, ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியிலும் அதிர்ச்சி அளிக்கக் கூடும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. போட்டி நடைபெறும் ஹாங்சோவ் நகரில் இருக்கும் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதும், இந்திய அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.


உத்தேச அணிகள்:


இந்தியா:


ஜெய்ஷ்வால், ஆர்.கே. சிங் , ஆர்.டி. கெய்க்வாட் (கேப்டன்) , திலக் வர்மா , ஆர்.ஏ. திரிபாதி , எஸ். துபே , ஷாபாஸ் அகமது , வாஷிங்டன் சுந்தர் , ஜே.எம். சர்மா , அர்ஷ்தீப் சிங் , ரவி பிஷ்னோய்


ஆப்கானிஸ்தான்:


செடிகுல்லா அடல் , நூர் அலி சத்ரன் , கரீம் ஜனத் , குல்பாடின் நைப் (கேப்டன் ) , ஜுபைத் அக்பரி , ஷாஹிதுல்லா கமால் , அஃப்சர் ஜசாய் , முகமது ஷாஜாத் , ஃபரித் மாலிக் , ஷரபுதீன் அஷ்ரப் , கைஸ் அஹ்மத்