இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரினை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனையைத் துவக்கியுள்ளது. இலங்கையில் முதல் கட்டப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி மதியம் 12 மணி மதியம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிக்கெட்டுகள் pcb.bookme.pk இல் கிடைக்கும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தெரிவித்துள்ளன. . ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும்.
அதேபோல் இந்த தொடருக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 17 அன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனையில், செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
இறுதிப் போட்டி உட்பட ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷை இலங்கை எதிர்கொள்ளும் போட்டியுடன் இலங்கை அணி இந்த தொடரை தொடங்கவுள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. போட்டியை நடத்தும் பாகிஸ்தான், நேபாளத்துடன் ஆகஸ்ட் 30-ம் தேதி மோதும் போது முல்தானில் இந்த தொடரை தொடங்குகிறது.
டிக்கெட் வாங்க நினைக்கும் ரசிகர்களுக்கு..
ஒரு அடையாள அட்டை / பாஸ்போர்ட்டில் நான்கு டிக்கெட்டுகள் வரை பெற முடியும் என இந்த தொடரை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு ஒரு அடையாள அட்டை / பாஸ்போர்ட்டில் 2 டிக்கெட்டுகள் வரை வாங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முழு போட்டி அட்டவணை:
தேதி | குரூப் லீக் போட்டிகள் | இடம் |
ஆகஸ்ட் - 30 | பாகிஸ்தான் vs நேபாளம் | முல்தான் (பாகிஸ்தான்) |
ஆகஸ்ட் - 31 | வங்கதேசம் vs இலங்கை | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -2 | பாகிஸ்தான் vs இந்தியா | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -3 | வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -4 | இந்தியா vs நேபாளம் | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -5 | ஆப்கானிஸ்தான் vs இலங்கை | லாகூர் (பாகிஸ்தான்) |
சூப்பர் 4 சுற்றுகள் | ||
செப்டம்பர் -6 | A1 vs B2 | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -9 | B1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -10 | A1 vs A2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -12 | A2 vs B1 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -14 | A1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
இறுதிப்போட்டி | ||
செப்டம்பர் -17 | சூப்பர் 4 சுற்று - 1 vs 2 | கொழும்பு (இலங்கை) |