!IND Vs SL LIVE: கடைசி நொடி வரை திக்! திக்! இறுதியில் இலங்கை அணியை அலறவிட்ட இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Asia Cup 2023, IND Vs SL Live Updates: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
இந்திய அணிக்கு மிகவும் சவாலாக விளங்கிய தனஞ்செயா விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றியுள்ளார்.
இலங்கை அணி வெற்றி பெற 90 பந்தில் 60 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளது. மேலும், இலங்கை அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளது.
நெருக்கடியில் இருந்த இலங்கை அணியை தனஞ்செயா மெல்ல மெல்ல தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டுள்ளார்.
6வது விக்கெட்டை இலங்கை அணி இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாகியுள்ளது.
சிறப்பாக பந்துவீசி வரும் இந்திய அணி இலங்கை அணியின் 5வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இலங்கை அணி 17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 3வது மற்றும் 4வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளது.
5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 21 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பும்ரா விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி 213 ரன்கள் எடுத்த நிலையில் தனது 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 47 ஓவர்களில் 197 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி தனது 6வது விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது இந்திய அணி 36 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 35வது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது 5வது விக்கெட்டை இழந்துள்ளது. இஷான் கிஷன் தனது விக்கெட்டை 61 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
மிகவும் பொறுமையாக விளையாடிக்கொண்டு இருந்த இந்திய அணியின் இஷான் கிஷன் தனது முதல் சிக்ஸரை 57வது பந்தில் அடித்துள்ளார்.
நிதான ஆட்டத்தில் இருந்து அதிரடி ஆட்டத்துக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டு இருந்த கே.எல். ராகுல் தனது விக்கெட்டை 44 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் 30வது ஓவரில் இந்திய அணி 154 ரன்களை எட்டியுள்ளது.
போட்டியின் 28வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் இந்திய அணியின் கே.எல். ராகுல் அடுத்தடுத்து பவுண்டரிகள் பறக்கவிட்டு அதகளப்படுத்தியுள்ளார்.
இந்திய அணி கடைசியாக 18வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தது. அதன் பின்னர் 25வது ஓவர் வரை அதாவது 7 ஓவர்கள் முடிந்து விட்டது இன்னும் ஒரு பவுண்டரிகூட அடிக்கப்படவில்லை.
இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே சேர்த்து மந்தமாக ஆடி வருகிறது.
இந்திய அணி 91 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் நிதானமான ஆட்டத்தையே கடைபிடித்து வருகின்றனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடிவரும் இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை அணி சிறப்பாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறது. மூன்றாவது விக்கெட்டாக ரோகித் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி தனது விக்கெட்டை 3 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் இழந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் 122 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது 51வது ஒருநாள் அரைசதத்தினை எட்டியுள்ளார்.
நிதானமாக ஆடி வந்த கில் பவர்ப்ளேவிற்குப் பின்னர் அதிரடிக்கு கியரை மாற்ற நினைத்து தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் 25 பந்தில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெடி இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இது இவரது 248வது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
6 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி விக்கெட் எதையும் இழக்காமல் 31 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Background
Asia Cup 2023, IND Vs SL Live Updates: ஆசிய கோப்பைத் தொடட் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் களமிறங்கின.
லீக் சுற்றின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரில் இருந்து வெளியேறின. இதனால், இந்தியா பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி ரிசர்வ் டேவிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில் இந்திய அணி இன்று அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக களமிறங்குகிறது.
இந்தியா பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இலங்கை ப்ளேயிங் லெவன்: பாதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பத்திரனா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -