ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டி மழையால் அவ்வப்போது பாதிக்கப்பட்டாலும் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோகித் சர்மா 11 ரன்களும், விராட் கோலி 4 ரன்களும் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.


இஷான் அரைசதம்:


நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் ரசிகர்களை ஏமாற்ற, நீண்ட நேரம் களத்தில் நின்ற சுப்மன்கில்லும் 10 ரன்களில் ஆட்டமிழக்க 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதையடுத்து, இந்திய அணிக்காக ஹர்திக் பாண்ட்யா – இஷான் கிஷான் ஜோடி சேர்ந்தனர்.


மிகவும் நிதானமாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து இருவரும் மீட்டனர். ஓரிரு ரன்களாக சேர்த்த இவர்கள் இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர். இஷான்கிஷான் சிக்ஸரும் விளாசி குஷிப்படுத்தினார். மிகவும் பொறுப்புடன் ஆடி இஷான்கிஷான் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார்.


நம்பர் 5ல் அபாரம்:


ஜாம்பவான் வீரர்களான ரோகித், விராட் கோலி ஆட்டமிழந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்ட சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யரும் சொதப்ப இளம் வீரரான இஷான்கிஷான் மிரட்டலான பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து அரைசதம் விளாசியதால் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.


இளம் வீரரான இஷான் கிஷான் தனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதை மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறார். தொடக்க வீரராக வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இஷான்கிஷான், நம்பர் 5 வீரராக களமிறங்கினார்.


பார்ட்னர்ஷிப் 100:


நம்பர் 5ல் அவர் எவ்வாறு செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில், உலகக்கோப்பை தொடர் அடுத்து வரும் சூழலில் இஷான் கிஷான் வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டு அரைசதம் விளாசியுள்ளார்.


25 வயதான இஷான்கிஷான் இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 1 இரட்டை சதம், 7 அரைசதங்களுடன் 753 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.  ஹர்திக் – இஷான்கிஷானின் அபாரமான பார்ட்னர்ஷிப்பால் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தத்தளித்த இந்திய அணி தற்போது நல்ல இலக்கை நிர்ணயிக்கும் பயணத்தில் முன்னேறி வருகிறது.


மேலும் படிக்க:  Virat Kohli Watch Video: வியந்துபோன பாகிஸ்தான் வீரர்கள்.. அன்பிலும் சிக்ஸர் அடிக்கும் விராட் கோலி.. வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க: IND Vs Pak: நெருப்பாய் களம் காணும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் சாதித்தது என்ன?