ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். மழை காரணமாக போட்டிகள் ஐக்கிய அமீரகத்டதில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இலங்கையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடக்கவிருந்த இந்த ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் மழை காரணமாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பிற்குப் பிறகு அதாவது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2022ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. 2022ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 ஆசிய அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் போட்டிகள் நடைபெறும் இந்த போட்டிகளை இலங்கை அணி நடத்துவதாக இருந்தது. இதனால் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானம் பல்லேகலவில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானம், காலி சர்வதேச மைதானம், தம்புள்ளை சர்வதேச மைதானம் மற்றும் போன்ற மைதானங்களில் போட்டிகள் நடத்த இலங்கை அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே 2020ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பையின் பதிப்பை இலங்கை அணி நிர்வாகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு தற்போது 2022-ல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியானது, ஆசிய கோப்பை போட்டியின் 15 சீசன் ஆகும்.
இந்தாண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுக்குப் பின்னர் மேலும் ஒரு அணி போட்டியில் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்குப் முன் நடைபெறும் முக்கிய தொடர் போட்டி என்பதால் ஆசிய அணிகள் அனைத்தும் தங்களது அனைத்து ஆட்ட யுக்திகளையும் சோதனை செய்து கொள்வதற்கான ஓர் நல்வாய்ப்பாக இந்த சீசன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை காரணமாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த போட்டிகள் முடிந்ததும் வீரர்கள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். மாறுபட்ட சீதோஷன நிலையினைக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளுக்கு உடனடியாக அதுவும், உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதால் வீரர்களுக்கு உடல்நிலைச் சீர்கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கையில் இருந்து போட்டிகள் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட மறைமுகக் காரணம் இலங்கையில் உள்ள அரசியல் சூழல் வீரர்களின் பாதுகாப்பினை கேள்விகுறியாக்கியுள்ளது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து அறிவிக்கப்பட முடியாத தகவலாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்