துபாயில் நடைபெற்று வரும், ஆசியக்கோப்பை 2022, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும், தங்கள் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதைத் தெரிவிக்கும் வகையில், தங்களின் கைகளில் கருப்புப்பட்டை அணிந்திருந்தனர்.






ஆசிய கோப்பை போட்டித் தொடர் நேற்று துபாயில் தொடங்கியது. இந்த போட்டியில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதன்படி, பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத்  தொடங்கி விளையாடி வருகிறது.


இரு நாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக மைதானம் முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் இரு நாட்டு தேசிய கொடியுடன் குவிந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் நடைபெற்று வரும், ஆசியக்கோப்பை 2022, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும், தங்கள் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதைத் தெரிவிக்கும் வகையில், தங்களின் கைகளில் கருப்புப்பட்டை அணிந்திருந்தனர்.


பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வரலாற்று மழை மற்றும் வெள்ளத்தால் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் காலநிலை அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் இருந்து, பருவமழை மற்றும் வெள்ளத்தில் 900 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிவு பதிவாகி உள்ளது.


”கோடை காலம் தொடங்கியதில் இருந்து, பல பருவமழை சுழற்சிகள் பாகிஸ்தானை தாக்கியுள்ளன. இதனால் பெரு வெள்ளம் நாடு முழுவதும் 400,000 வீடுகளை அழித்துள்ளது. குறைந்தபட்சம் 184,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்நாட்டு காலநிலை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், சுமார் 1,033 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது