இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. 






சமீப காலமாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் போட்டி குறித்து பெரும் பரபரப்பும், பில்டப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ் குறித்த விவரங்களை கீழே காணலாம். 


இதுவரை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


ஆசிய கோப்பை - இந்தியா vs பாகிஸ்தான்  போட்டிகளின் விவரம் : 



  • 1984 ஆசிய கோப்பை: இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

  • 1988 ஆசிய கோப்பை: இந்தியா பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • 1995 ஆசிய கோப்பை: பாகிஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

  • 1997 ஆசிய கோப்பை: போட்டி மழையால் கைவிடப்பட்டது.

  • 2000 ஆசிய கோப்பை: பாகிஸ்தான் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

  • 2004 ஆசிய கோப்பை: பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

  • 2008 ஆசியக் கோப்பை: சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

  • 2010 ஆசிய கோப்பை: இந்தியா பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • 2012 ஆசிய கோப்பை: இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • 2014 ஆசிய கோப்பை: பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

  • 2016 ஆசிய கோப்பை: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

  • 2018 ஆசிய கோப்பை: இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.


இந்தியா vs பாகிஸ்தான் – ஆசிய கோப்பை புள்ளிவிவரங்கள்:



  • ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் அடித்த இந்திய வீரர்  - ரோஹித் சர்மா -328

  • ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அதிக ரன் அடித்த பாகிஸ்தான் வீரர் - சோயப் மாலிக் - 400

  • ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக விக்கெட்டு எடுத்த இந்திய வீரர் - ஹர்திக் பாண்டியா - 3

  • ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு அதிக விக்கெட்டுகள்: முகமது அமீர் – 8


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.