2023 ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிராட் இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் ஆஸ்திரேலிய அணியின் இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை ஆட்டமிழக்க செய்த அவர், அடுத்த பந்தில் மார்னஸ் லாபுஷேனை கோல்டன் டக் அவுட் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார்.
டேவிட் வார்னருக்கு எதிராக பிராட்:
கடந்த 10 ஆண்டுகளாக டேவிட் வார்னருக்கு எதிரான ஸ்டூவர்ட் பிராட் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15வது முறையாக வார்னரை வெளியேற்றி கெத்து காமித்தார். பிராட், டேவிட் வார்னரை 2013 முதல் தற்போது வரை 15 முறை வெளியேற்றியுள்ளார். இதில், இங்கிலாந்தில் 11 இன்னிங்ஸ்களில் வார்னரை 9வது முறையாகவும், அதே நேரத்தில், மீதமுள்ள 6 முறை ஆஸ்திரேலியாவில் வார்னரை வெளியேற்றியுள்ளார். கிளென் மெக்ராத் ஆஷஸ் தொடரில் அதிகபட்சமாக 19 முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் அதர்னை வெளியேற்றியுள்ளார்.
மார்னஸ் லாபுஷேன் கோல்டன் டக்:
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தற்போது மார்னஸ் லாபுஷேன் நம்பர் 1 இடத்தில் உள்ளார். நேற்றைய நாளில் பிராட் வீசிய முதல் பந்தே லாபுஷேன் பேரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 23 இன்னிங்ஸ்களில் முதல் முறையாக ரன் எதுவும் எடுக்காமல் லாபுஷேன் பெவிபியன் திரும்பினார்.
போட்டி சுருக்கம்:
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்கு 393 ரன்களை பெற்று இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.
அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை அடித்துள்ளது. உஸ்மான் கவாஜா 126* மற்றும் அலெக்ஸ் கேரி 52* ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். தற்போது, இங்கிலாந்து அணி 82 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.