ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்துள்ளது. மொத்தம் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றுள்ளது.


2019ம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் மோதிய ஒருநாள் போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு சுருண்டது. அப்போது, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ” 92 ரன்களில் இந்தியா ஆல் அவுட்டாகியது. நம்ப முடியவில்லை. இந்த நாட்களில் எந்த அணியாவது 100 ரன்களுக்கு கீழே அவுட்டாவர்களா..! என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு கீழே இந்திய ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.






மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த இங்கிலாந்து 68 ரன்களுக்கு சுருண்டது அந்த அணியின் பார்ம் குறித்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து 68 ரன்களுக்கு சுருண்டதை குறிப்பிட்டு மைக்கேல் வாகனை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் கிண்டலடித்துள்ளார்.






அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மைக்கேல் வாகனின் அந்த டுவிட்டர் பதிவை அவரது செல்போனில் ஓபன் செய்து காட்டுவதுடன் டன் என்பது போல சைகை காட்டுகிறார். மேலே, இங்கிலாந்து ஆல் அவுட் 68 என்று பதிவிட்டுள்ளார். வாசிம் ஜாபரின் இந்த டுவிட்டை பலரும் ரீ டுவிட் செய்து வருகின்றனர். மைக்கேல் வாகனும், வாசிம் ஜாபரும் சமூக வலைதளங்களில் எப்போதும் செயல்பாட்டுடன் இருப்பவர்கள். கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர். 





ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் போலந்து 4 ஓவர்கள் மட்டுமே வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தார்.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண