ஆஷஸ் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன், மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்தார். இதையடுத்து, கடந்த மாதம் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இவரைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். மேலும், துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.


ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் ஏமாற்றுக்காரனையா துணை கேப்டனாக நியமிப்பது என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியது. 


இந்தநிலையில், ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்ஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது, ஸ்டீவ் ஸ்மித் தான் விளையாடும் கிரிக்கெட்டின் மீது எவ்வளவு காதலும், மரியாதையும் வைத்துள்ளார் என்பது போல அவரது மனைவி டேனிஸ் வில்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிகிறது. 


 






அந்த பதிவில், இரவு ஒரு மணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தனது கையில் உள்ள புதிய வில்லோ பேட்டை சோதனை செய்து வருகிறார். மைதான களத்தில் வெள்ளை ஜெர்சி மற்றும் முழு கிட்டுடன் விளையாடுவது போல, இரவு ஒரு மணிக்கு ஹோட்டல் பெட்ரூமில் விளையாடுகிறார். கிறிஸ்துமஸ் ஈவ்னிங் குழந்தைகள் விளையாடுமே அப்படி!


 






இதற்கு கமெண்ட் செய்த ஸ்மித், சில சமயங்களில் விளையாடுவது போல் ஒரு முழுமையான உணர்வை பெற முழு கிட்டுடன் விளையாடுவது தான் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண