கடந்த 2018 ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் ஓய்வு பெற்றதிலிருந்து, டெஸ்ட் அணியில் ஒரு புதிய தொடக்க வீரர்கள் கூட்டணியை இங்கிலாந்து அணி தீவிரமாக தேடி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இவரை ஒன்பது வெவ்வேறு தொடக்க பார்ட்னர்ஷிப்களை களமிறக்கி முயற்சி செய்துள்ளது. அதில், ஒரே ஒரு ஜோடி மட்டுமே கிரீஸில் 30 க்கு மேல் சராசரியாக இருந்தது. அந்த ஜோடியும் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் கூட்டணியே!


இந்த ஜோடியும் கடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இதையடுத்து, கடந்த வாரம் அடிலெய்ட் ஓவலில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியிடம் இங்கிலாந்து அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 




அதன்பிறகு, தொடக்கம் சிறப்பாக தராத இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீதை மாற்றக்கோரி அந்நாட்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது டெஸ்டில் ரன் எடுக்க திணறி வரும் ரோரி பர்ன்ஸுக்கு பதிலாக ஜாக் க்ராவ்லி களமிறக்கப்பட்டார். அவரும் இந்த போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் முறையே 12 மற்றும் 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 


 






அதேபோல், மற்றொரு தொடக்க வீரரான ஹசீப் ஹமீத் இரு இன்னிங்ஸிலும் 0 மற்றும் 7 என்ற ரன்களின் வெளியேறினார். ஹசீப் ஹமீத் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனது மூலம் இங்கிலாந்து அணி இந்த ஆண்டு மோசமான சாதனை ஒன்றை தனதாக்கியுள்ளது. அதன்படி, 2021 இல் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரருக்கு இது 14வது டெஸ்ட் டக் அவுட் ஆகும். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கடந்த 1998 ல் 7 முறை டக் அவுட்டானதே அதிகபட்சமாக இருந்தது. 


 இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக டெஸ்ட் டக் அவுட்டான வருடம் : 


14 – 2021


7 – 1986


7 – 1998


6 – 1990


6 – 2002


6 – 2005


2021ல் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் எடுத்த ரன்கள் விவரம் : 


பர்ன்ஸ் – 530 ரன்கள்,27.89 சராசரி, 19 இன்னிங்ஸ் (6 டக் அவுட்)


டாம் சிப்லி – 356 ரன்கள், 19.77 சராசரி, 20 இன்னிங்ஸ் (4 டக் அவுட்)


ஹசீப் ஹமீத் – 189 ரன்கள்,23.62 சராசரி, 8 இன்னிங்ஸ் ( 3 டக் அவுட்)


ஜாக் க்ராவ்லி – 114 ரன்கள்,12.66 சராசரி, 9 இன்னிங்ஸ் (1 டக் அவுட்)


அதேபோல், கடந்த 2012 ல் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஓய்வுக்கு பிறகு, இங்கிலாந்து அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்றி தவித்து வருகிறது. மேலும், இவரின் ஓய்வுக்கு பிறகு இங்கிலாந்து அணி சார்பில் 21 தொடக்க வீரர்கள் களமிறங்கினர். இவர்களில் குக், ரூட் மற்றும் நைட்வாட்ச்மேன் ஜாக் லீச் ஆகிய மூன்று பேர் மட்டுமே சராசரி 32க்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண