இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளார் என்கிற சாதனையை படைத்தார்.
அர்ஷ்தீப் சாதனை:
அபூதாபியில் நடைபெற்ற ஏசிசி ஆசியக் கோப்பை 2025 போட்டியில், ஓமானுக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்த சாதனையை படைத்தார்.
26 வயதான அர்ஷ்தீப் தனது 100வது T20 சர்வதேச விக்கெட்டை பிடித்து, இந்தியாவில் முதல் பந்துவீச்சாளராக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
நீண்ட நாட்கள் காத்திருந்த சாதனை
கடந்த சில மாதங்களாக அதிக வாய்ப்பு கிடைக்காததால், அர்ஷ்தீப்பின் விக்கெட் எணிக்கை 99-ல் தேங்கி இருந்தது. இந்த ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான்) அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அபூதாபி ஷேக் சாயித் ஸ்டேடியத்தில் ஓமானுக்கு எதிரான போட்டியில் இறுதியாக மீண்டும் XI-இல் இடம் பெற்றார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஓய்வு பெற, ஹர்ஷித் ரணாவுடன் சேர்த்து அர்ஷ்தீப்பும் இறக்கப்பட்டார். அதில் அவர் தனது ய சாதனையைப் பதிவு செய்தார்.
சாதனை விக்கெட் எப்போது வந்தது?
இந்தியா நிர்ணயித்த 189 ரன்களை சேஸ் செய்த ஓமன், இந்திய அணிக்கு நல்ல சவாலை அளித்தது. 20வது ஓவரில், தனது ஓமன் வீரர் வினாயக் ஷுக்லாவை அவுட் செய்து, அர்ஷ்தீப் தனது 100வது T20 விக்கெட்டை எடுத்தார்.
2022-ல் அறிமுகமானவர், 2024 உலகக்கோப்பை வென்றவர்
அர்ஷ்தீப் சிங் 2022 ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானார்; அந்த ஆட்டத்திலேயே 2 விக்கெட்டுகளைப் எடுத்திருந்தார். அதன் பின் பல்வேறு முக்கிய தொடர்களில் பங்கேற்ற இவர், 2024-ல் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கைப்பற்றிய ICC T20 உலகக்கோப்பை வெற்றியின் முக்கிய அங்கமாகவும் இருந்தார்.
இந்திய T20 அணியின் புதிய முகம்
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா தற்போது ஆசியக் கோப்பையில் பங்கேற்று வருகிறது. அதில் ஓமனுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்திலேயே அர்ஷ்தீப், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை எழுதியுள்ளார்.