2023 ஆசிய கோப்பை போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி (நாளை) முதல் பாகிஸ்தானில் பிரமாண்டமாக தொடங்குகிறது. கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடைபெற்ற நிலையில், இம்முறை ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி முறையில் நடக்கிறது.


ஒருநாள் உலகக் கோப்பைக்கு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சூழலில், அதற்கு முன் நடைபெறும் ஆசிய கோப்பையை வென்று தனது பலத்தை நிரூபிக்க இந்திய அணி முயற்சிக்கும். 


பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே இந்திய அணி ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது. ஆனால், இதுவரை ஒரே ஒருமுறை ஒரே ஒரு இந்திய பந்துவீச்சாளர் மட்டுமே ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. 


1988 - அர்ஷத் அயூப் 


இந்திய அணியின் பந்துவீச்சாளர் அர்ஷத் அயூப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 1988-ம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அர்ஷத் 9 ஓவர்களில் 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் இந்திய அணி தனித்து வெற்றி பெற்றது. பின்னர் ஆசிய கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அர்ஷத் பெற்றார். இருப்பினும், இதற்குப் பிறகு, புவனேஷ்வர் குமார் டி20 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை படைத்தார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் யாரும் இத்தகைய சாதனையை படைக்கவில்லை.


லசித் மலிங்கா: 


இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை மலிங்கா இதுவரை மூன்று முறை செய்துள்ளார். மேலும், 9 பந்துவீச்சாளர்கள் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை இதுவரை எடுத்துள்ளனர். அந்த பட்டியல் பின்வருமாறு...







  1. லசித் மலிங்கா (இலங்கை) - 3 முறை

  2. அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) - 2 முறை

  3. அர்ஷத் அயூப் (இந்தியா) - 1 முறை

  4. அகிப் ஜாவேத் (பாகிஸ்தான்) - 1 முறை

  5. சக்லைன் முஷ்டாக் (பாகிஸ்தான்) - 1 முறை

  6. சோஹைல் தன்வீர் (பாகிஸ்தான்) - 1 முறை

  7. முத்தையா முரளிதரன் (இலங்கை) - 1 முறை

  8. பர்வேஸ் மஹரூப் (இலங்கை) - 1 முறை

  9. திசரா பெரேரா (இலங்கை) - 1 முறை.