அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆசிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவின் 180 ரன்கள் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீனின் 114 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  480 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில்  சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன்  அஸ்வின் சுழலில் ஆதிக்கம செலுத்தினார். அவர் 47.2 ஓவர்கள் வீசி 91 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அனில் கும்ப்ளேவை அவர் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளார். அது என்ன என இங்கே காணலாம். 


கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்:


உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், பேட்டிங்கிலும் கலக்கு கலக்கு என கலக்குபவர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக தனது சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். இதுவரை அந்த சாதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவிடம் இருந்தது. கும்ப்ளே 25 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெடுகள் வீழ்த்தியதன் மூலம், இந்திய மண்ணில் இந்தியாவுக்காக 26 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 


முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின்:


சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் இதுவரை சொந்த மண்ணில்  அதாவது இலங்கையில் 45 முறை 5 அல்லது 5க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது இந்திய அணியின்  அஸ்வின் உள்ளார். முன்பு இந்த இடத்தில் இருந்த இலங்கையில் ரங்கனா ஹெராத்துடன் 2வது இடத்தை அஸ்வின் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்:


இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் தன்வசம் வைத்திருந்தார். இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். அஸ்வின் 113 விக்கெட்டுகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணி தரப்பில்  நாதன் லயனும் 113 விக்கெட்டுகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச அளவில் 7வது இடம்:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் சர்வதேச அளவில் 7வது இடத்தில் உள்ளார். முன்னாள் வீரர் இயான் போத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் 148 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் வால்ஷ், 3வது இடத்தில் ப்ராட், 4வது இடத்தில் ஹாட்லீயும், 4வது இடத்தில் ஆம்ப்ரோசும், 6வது இடத்தில் வில்சும், 7வது இடத்தில் அஸ்வினும் உள்ளனர். இந்த 7 பேரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அஸ்வின் மட்டுமே 22 டெஸ்ட் ஆடியுள்ளார். ஆனால் மற்றவர்கள் அவரை விட அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், பந்து வீச்சில் தன்னை மிஞ்சி சாதனை படைத்த  அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், சிறப்பாக பந்து வீசியுள்ளீர்கள் அஸ்வின், க்ளாஸ்

என பாராட்டியுள்ளார். இதில் அஸ்வைனை டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.