Ajinkya Rahane in Team India: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7 ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்களாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. அதனை தொடர்ந்து, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இரண்டாவது முறையாக தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


இந்த தொடருக்காக பாட் கம்மின்ஸ் தலைமையிலான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. 


இதில் மிகவும் ஆச்சரியமாக விஷயம் என்னவென்றால் அஜிங்கியா ரஹானே 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். அஜிங்கியா ரஹானே தனது கடைசி டெஸ்ட் போட்டியை கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். அதன் பின்னர் ரஹானே எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. தொடர்ந்து, டெஸ்ட் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 


முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த அஜிங்கியா ரஹானே, முதலில் பதவி பகித்த துணை கேப்டனிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ச்சியாக, பார்ம் அவுட் காரணமாக இந்திய அணியிலும் தனது இடத்தை இழந்தார். 


ஒரு வருடமாக காத்திருந்த அஜிங்கியா ரஹானேவுக்கு ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரஹானே, தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் ரஹானேவின் இந்த ஃபார்மை ரஹானே 2.0 என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். 


 ஐபிஎல் 2023ல் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய ரஹானே, 52.25 சராசரியுடன் 199.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 2 அரைசதங்களுடன் 209 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2022-23 ரஞ்சி டிராபியில், இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உள்பட 634 ரன்கள் குவித்தார். டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் ரஹானே, இரவு பகலாக கடுமையாக உழைத்து வந்தார். அதற்கு தற்போது பலன் கிடைத்தது. 


மிடில் ஆர்டரில் தடுமாறும் இந்தியா:


இது தவிர ரஹானே இந்திய அணிக்கு திரும்புவதற்கு மற்றொரு பெரிய காரணம் மிடில் ஆர்டர் பிரச்சினைதான். அறுவை சிகிச்சை காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் உலக சாம்பியஷிப் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார், இவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் முயற்சி செய்யப்பட்டு அது பலனிக்கவில்லை. 


இதன் காரணமாக, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அனுபவம் தேவை என்பதால் ரஹானேவை மீண்டும் இந்திய அணிக்கு கொண்டு வந்தது பிசிசிஐ. 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம்:


இந்திய அணி விவரம்:


ரோகித்சர்மா (கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல்,கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே


ஆஸ்திரேலிய அணி விவரம்: 


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.