வெற்றியுடன் தொடரை முடித்த இந்திய அணி:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியை கைப்பற்றியது.
இந்திய அணி விளையாடும் அடுத்த போட்டி எப்போது?
இதனிடையே மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சிகளை இப்போதே வீரர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான் ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி எப்போது விளையாடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அந்தவகையில் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தான் இனி சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் போட்டியாக இருக்கும். அதன்படி, ஜூன் மாதம் 5 ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை அட்டவணை:
தேதி |
போட்டிகள் |
குழு |
இடம் |
ஜூன் 1 | அமெரிக்கா vs கனடா | குழு ஏ | டல்லாஸ் |
ஜூன் 2 | வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா | குழு சி | கயானா |
ஜூன் 2 | நமீபியா vs ஓமன் | குழு பி | பார்படாஸ் |
ஜூன் 3 | இலங்கை vs தென்னாப்பிரிக்கா | குழு டி | நியூயார்க் |
ஜூன் 3 | ஆப்கானிஸ்தான் vs உகாண்டா | குழு சி | கயானா |
ஜூன் 4 | இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து | குழு பி | பார்படாஸ் |
ஜூன் 4 | நெதர்லாந்து vs நேபாளம் | குழு டி | டல்லாஸ் |
ஜூன் 5 | இந்தியா vs அயர்லாந்து | குழு ஏ | நியூயார்க் |
ஜூன் 5 | பப்புவா நியூ கினியா vs உகாண்டா | குழு சி | கயானா |
ஜூன் 5 | ஆஸ்திரேலியா vs ஓமன் | குழு பி | பார்படாஸ் |
ஜூன் 6 | அமெரிக்கா vs பாகிஸ்தான் | குழு ஏ | டல்லாஸ் |
ஜூன் 6 | நமீபியா vs ஸ்காட்லாந்து | குழு பி | பார்படாஸ் |
ஜூன் 7 | கனடா vs அயர்லாந்து | குழு ஏ | நியூயார்க் |
ஜூன் 7 | நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் | குழு சி | கயானா |
ஜூன் 7 | இலங்கை vs பங்களாதேஷ் | குழு டி | டல்லாஸ் |
ஜூன் 8 | நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா | குழு டி | நியூயார்க் |
ஜூன் 8 | ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து | குழு பி | பார்படாஸ் |
ஜூன் 8 | வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா | குழு சி | கயானா |
ஜூன் 9 | இந்தியா vs பாகிஸ்தான் | குழு ஏ | நியூயார்க் |
ஜூன் 9 | ஓமன் vs ஸ்காட்லாந்து | குழு பி | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 10 | தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் | குழு டி | நியூயார்க் |
ஜூன் 11 | பாகிஸ்தான் vs கனடா | குழு ஏ | நியூயார்க் |
ஜூன் 11 | இலங்கை vs நேபாளம் | குழு டி | லாடர்ஹில் |
ஜூன் 11 | ஆஸ்திரேலியா vs நமீபியா | குழு பி | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 12 | z | குழு ஏ | நியூயார்க் |
ஜூன் 12 | வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து | குழு சி | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
ஜூன் 13 | இங்கிலாந்து vs ஓமன் | குழு பி | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 13 | பங்களாதேஷ் vs நெதர்லாந்து | குழு டி | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் |
ஜூன் 13 | ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா | குழு சி | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
ஜூன் 14 | அமெரிக்கா vs அயர்லாந்து | குழு ஏ | லாடர்ஹில் |
ஜூன் 14 | தென்னாப்பிரிக்கா vs நேபாளம் | குழு டி | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் |
ஜூன் 14 | நியூசிலாந்து vs உகாண்டா | குழு சி | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
ஜூன் 15 | இந்தியா vs கனடா | குழு ஏ | லாடர்ஹில் |
ஜூன் 15 | நமீபியா vs இங்கிலாந்து | குழு பி | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 15 | ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து | குழு பி | செயின்ட் லூசியா |
ஜூன் 16 | பாகிஸ்தான் vs அயர்லாந்து | குழு ஏ | லாடர்ஹில் |
ஜூன் 16 | பங்களாதேஷ் vs நேபாளம் | குழு டி | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் |
ஜூன் 16 | இலங்கை vs நெதர்லாந்து | குழு டி | செயின்ட் லூசியா |
ஜூன் 17 | நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா | குழு சி | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
ஜூன் 17 | வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான் | குழு சி | செயின்ட் லூசியா |
ஜூன் 19 | A2 vs D1 | குழு 2 | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 19 | B1 vs C2 | குழு 2 | செயின்ட் லூசியா |
ஜூன் 20 | C1 vs A1 | குழு 1 | பார்படாஸ் |
ஜூன் 20 | B2 vs D2 | குழு 1 | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 21 | B1 vs D1 | குழு 2 | செயின்ட் லூசியா |
ஜூன் 21 | A2 vs C2 | குழு 2 | பார்படாஸ் |
ஜூன் 22 | A1 vs D2 | குழு 1 | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 22 | C1 vs B2 | குழு 1 | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் |
ஜூன் 23 | A2 vs B1 | குழு 2 | பார்படாஸ் |
ஜூன் 23 | C2 vs D1 | குழு 2 | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
ஜூன் 24 | B2 vs A1 | குழு 1 | செயின்ட் லூசியா |
ஜூன் 24 | C1 vs D1 | குழு 1 | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் |
ஜூன் 26 | TBD | அரையிறுதி 1 | கயானா |
ஜூன் 27 | TBD | அரையிறுதி 2 | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
ஜூன் 29 | TBD | இறுதிப்போட்டி | பார்படாஸ் |