ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் ரஷித் கான் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் இது தொடர்பான தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜிம்பாப்பே அணி விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை நேற்று அறிவித்திருந்ததது.
முதுகில் ஏற்பட்ட காயம்:
ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிக்குள்ளானர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார். இதனால் ரஷித் கான் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்டார். அதேபோல், ஜிம்பாப்பே அணிக்கு எதிரான நீண்ட கிரிக்கெட் தொடரை அவர் தவறவிடும் சூழல் ஏற்பட்டது. நவம்பர் மாதம் வரை ரஷித் கான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் அணிக்கு திரும்பிய ரஷித் கான்:
இந்த நிலையில் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஷித் கான் விளையாடுவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஷித் கான் எங்களுக்காக விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
அவர் (ரஷித்) முதுகு அறுவை சிகிச்சையின் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று குணமடைந்தார், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு முன்பு அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இப்போது அவர் நன்றாக இருக்கிறார். மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களுக்காக இடம்பெற தயாராக உள்ளார்," என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் vs ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர் அட்டவணை
1வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, 2024, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
2வது டெஸ்ட்: ஜனவரி 2-6, 2025, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ