தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் பிரபல நடிகரின் மகனுக்கு இடம் - குவியும் பாராட்டு

பிரபல நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இவரது மனைவி மனசா ஏமச்சந்திரன். இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் லால்சலாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விக்ராந்த் நடிகர் மட்டுமின்றி சிறந்த கிரிக்கெட் வீரரும் ஆவார்.

Continues below advertisement

தமிழ்நாடு அணியில் விக்ராந்த் மகன்:

செலிபிரட்டிஸ் கிரிக்கெட் லீக்கில் தமிழ் திரையுலகினருக்காக பல தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது மகன் யஷ்வந்த். இவரும் தனது தந்தை விக்ராந்தை போல கிரிக்கெட்டில் சிறு வயது முதலே ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநிலத்தின் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு விக்ராந்த் மகன் யஷ்வந்த் தேர்வாகியுள்ளார். இதை நடிகர் விக்ராந்தே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தையாக பெருமை:

அவர் பதிவிட்டுள்ளதாவது, “ஒரு தந்தையாக மிகவும் மகிழ்ச்சியான நாள். உன்னை நினைத்து இதைவிட பெருமைப்பட முடியாது. 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணி உன் நீண்ட பயணத்தின் முதல் படி. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள். கடவுளுக்கு நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விக்ராந்த் 1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், 2005ம் ஆண்டு கற்க கசடற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு போன்ற படங்கள் மூலமாக பிரபலமானார். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து அசத்தி வரும் விக்ராந்த், தற்போது நடித்து வரும் லால்சலாம் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார். பிரபல நடிகர் விஜய்க்கு நடிகர் விக்ராந்த் தம்பி முறை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!

 

Continues below advertisement