நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடுவர்களிடம் தெரிவிக்காமல் கைவிரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதேபோல் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஜடேஜா 185 பந்துகளில் 9 பவுண்டரி விளாசி 70 ரன்கள் குவித்து இருந்தார். மிகவும் சிறப்பாக விளையாடிய இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 


இந்த போட்டியில் இந்திய அணியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகிய ஆஸ்திரேலிய அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்ததில் ஜடேஜா மற்றும் அஸ்வினின் பங்கு தவிர்க்க முடியாதது ஆகும்.


முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான லபுசேனே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும், ரென்ஷா, ஹாண்ட்ஸ்கோம்ப், முர்பி ஆகிய 5 பேரை வீழ்த்தினார். 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரராகிய லபுசேனே மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகிய 2 பேரையும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 22 ஓவர்களில் 8 ஓவர்களை மெய்டானாக்கி 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2வது இன்னிங்சில் 12 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


ஜடேஜா இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 240 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, அங்கிருந்து இந்திய அணி 300 ரன்களை கடக்க பக்கபலமாக இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 185 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 70 ரன்களை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த அக்‌ஷர் படேல் 174 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 84 ரன்கள் விளாசி இந்தியா 400 ரன்களை எட்ட உதவினார்.