பிரபல இந்திய கிரிகெட் வீரர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement


இந்த வீடியோவில்,ரோஹித் ஷர்மா மற்றும அவர் மனைவி ரித்திகா (Ritika) உடன் ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வீடீயோ ஷூட் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இணையதளத்தில் க்யூட்டான வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.


இந்த வீடியோ ரோஹித் ஷர்மா ஹோலிப் பண்டிக்கைக்கு எப்படி வாழ்த்துச் சொல்லாம் என்றும் அதை எதிலிருந்து எடிட் செய்ய வேண்டும் என்றும் தனது மனைவி ரித்திகாவுடன் உரையாடலுடன் ஆரம்பிக்கிறது. அப்போது, ரோஹித், வண்ணங்களின் திருவிழா (festival of colours) என்பதிலிருந்து வீடியோவைத் தொடங்கலாம்.” என்கிறார். அதற்கு ரித்திகா சோ கூல், எனக்குப் பிடித்திருகிறது என்கிறார். வாழ்த்துச் செய்தியாக என்ன சொல்லலாம் என்று ரித்திகா ரோஹித்திடம் கூறுகிறார். ‘ஹோலி ஹே!. ஹேப்பி ஹோலி.’ என்று பல முறை கூறிவிட்டு. இறுதியாக,


”தி ஃபெஸ்டிவல் ஆஃப் கலர்ஸ் இஸ் ஹியர். ஹேப்பி ஹோலி!” என்று வாழ்த்துகளைப் பகிந்து கொள்கிறார்.


இந்த வீடியோவுடன்,” நான் சொல்ல விரும்புவது "ஹேப்பி ஹோலி". நீங்கள் அனைவரும் மகிழ்வுடன், ஜாலியாக ஹோலிப் பண்டிகை கொண்டாடும் தருணத்தில்க், ​​தயவுசெய்து உங்கள் செல்லப்பிராணி நண்பர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.