TN Budget 2022: பட்ஜெட் தாக்கலில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு...

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலின் போது அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

Continues below advertisement

தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

Continues below advertisement

ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுகவினரிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின்னரும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் மீண்டும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட் உரையை படிக்க சபாநாயகர் கூறினார். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement