14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது லீக் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளன. இதுவரை 20 லீக் போட்டிகள் முடிந்துள்ளன.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் தகுந்த பாதுகாப்பு இந்தத் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.


முன்னதாக, தொடர் தொடங்குவதற்கு முன்பு சில வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்நேரத்தில், அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.




ஆனால், சில வீரர்கள் காயம் காரணமாகவும், பயோ பபுள் விதிமுறைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். கடந்த ஓராண்டாக பயோ பபுளில் உள்ளதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறி, லியாம் லிவிங்ஸ்டன் விலகினார்.


மேலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ‘யார்க்கர் கிங்’ நடராஜன் தொடரில் இருந்து விலகினார்.


இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். கொரோனா தொற்றுக்கு எதிராக தனது குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.


அஸ்வினை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர்.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடப்பது எதற்கு என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும், சிலர் தற்போதைக்கு ஐபிஎல் தொடரே, கொரோனா அச்சத்தில் இருந்து போக்க ஒரே வழி என்று கூறுகின்றனர்.


<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a >pic.twitter.com/2TPkMmdWDE</a></p>&mdash; Pat Cummins (@patcummins30) <a >April 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், பிஎம் கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர்கள் கொரோனா நிதி அளித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.35 லட்சமாகும்.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு தன்னால் முடிந்த நிதியுதவிகளை கொடுத்துள்ளதாக தெரிவித்த கம்மின்ஸ், ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்களும் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாடு என்றும், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் எனவும் கம்மின்ஸ் கூறியுள்ளார்.