மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் பூஜா கேலோத் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிக்கு இவர் முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் இவர் கனடாவின் மேடிசன் பார்க்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் பூஜா கேலோத் 9-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 


 


இந்நிலையில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பூஜா கேலோத் ஸ்காட்லாந்து நாட்டின் கிறிஸ்டினாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே பூஜா கேலோத் ஆதிக்கம் செலுத்தினார். இதன்காரணமாக இவர் 12-2 என்ற கணக்கில் எளிதாக போட்டியை வென்றார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இதன்மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 3வது வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 


 






முன்னதாக நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று இருந்தனர். அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அத்துடன் திவ்யா காக்கரன் மற்றும் மோஹித் ஆகிய இருவரும் வெண்கலம் வென்று இருந்தனர். நேற்று ஒரே நாளில் இந்திய அணி 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இந்தச் சூழலில் இன்று மேலும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்திய அணி மொத்தமாக 7 பதக்கங்களை பெற்றுள்ளது. அடுத்ததாக ரவிக்குமார் தஹியா, நவீன்,வினேஷ் போகாத் ஆகியோ தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. அத்துடன் பூஜா சிஹாக், தீபக் நெஹ்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கத்திற்கு போட்டியிட உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண