காமன்வெல்த் போட்டிகளில் இன்று பளுதூக்குதல் மகளிருக்கான 87+ கிலோ  எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பூர்ணிமா பாண்டே பங்கேற்றார். இவர் முதலில் ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 103 கிலோ எடையை தூக்க முற்பட்டார்.  அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 103  கிலோ எடையை தூக்கினார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இவர் 106 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். எனினும் அதை சரியாக அவர் தூக்கவில்லை. இதன்மூலம் ஸ்நாட்ச் பிரிவின் முடிவில் அதிகபட்சமாக 103 கிலோ எடையை தூக்கி நான்காவது இடத்தில் இருந்தார்.


 


இதைத் தொடர்ந்து கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் பூர்ணிமா தன்னுடைய முதல் வாய்ப்பில் 125 கிலோ எடையை தூக்கினார். அடுத்து அவருடைய இரண்டாவது முயற்சியில் இவர் 133 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார்.எனினும் அவரால் அதை தூக்க முடியவில்லை. மீண்டும் தன்னுடைய மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர்133 கிலோ எடையை தூக்க முற்பட்டார். எனினும் அதிலும் பலனளிக்கவில்லை. இறுதியில் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 125 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் மொத்தமாக இவர் 228 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் இவர் இந்தப் பிரிவில் 6வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.


 




முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவருக்கான 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். அதேபோல் நேற்று ஆடவர் 96 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் வெள்ளிப்பதக்கம வென்று அசத்தியிருந்தார். காமன்வெல்த் பளுத்தூக்குதலில் இந்தியா தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன்காரணமாக அதிகமான பதக்கங்களை குவித்து வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண