காமன்வெல்த் போட்டிகள் வரும் 22-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் தொடங்க உள்ளது. இந்த போட்டித்தொடரில் மொத்தம் 72 நாடுகள் பங்கேற்க உள்ளன, இந்த தொடரில் இதுவரை ஒவ்வொரு நாடும் வாங்கிய பதக்கங்களின் பட்டியல்களையும், அவற்றில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தின் எண்ணிக்கையும் கீழே காணலாம்.


காமன்வெல்த் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை தொடர்ச்சியாக நிலைநாட்டியுள்ளது என்பது அதன் பதக்கங்களின் பட்டியலை காணும்போதே தெரிய வருகிறது.


ஆஸ்திரேலியா :




ஆஸ்திரேலியா இதுவரை 932 தங்கங்கள், 775 வெள்ளி மற்றும் 709 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 416 பதக்கங்களுடன் காமன்வெல்த் வரலாற்றில் முதலிடத்தில் கம்பீரமாக ஆஸ்திரேலியா உள்ளது.


இங்கிலாந்து :


இங்கிலாந்து நாட்டினரால் தொடங்கப்பட்ட காமன்வெல்த் போட்டித்தொடரில் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 2வது இடத்தில் உள்ளது. அந்த நாடு இதுவரை 714 தங்கப்பதக்கங்கள், 715 வெள்ளிகள் மற்றும் 715 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 2 ஆயிரத்து 144 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


கனடா :


காமன்வெல்த் போட்டிகளில் கனடா இதுவரை 484 தங்கப்பதக்கங்களும். 516 வெள்ளிப்பதக்கங்களும், 555 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது. மொத்தம் 1, 555 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.


இந்தியா :




காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை 181 தங்கப்பதக்கங்கள், 173 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 149 வெண்கலப் பதக்கங்கள் வென்று 503 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.


நியூசிலாந்து :


நியூசிலாந்து நாட்டினர் 159 தங்கப்பதக்கங்களையும், 220 வெள்ளிப்பதக்கங்களையும், 278 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 657 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.


தென்னாப்பிரக்கா :


130 தங்கப்பதக்கங்கள், 123 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 136 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 389 பதக்கங்களுடன் தென்னாப்பிரிக்கா பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.


ஸ்காட்லாந்து :




ஸ்காட்லாந்து 119 தங்கப் பதக்கத்துடனும், 132 வெள்ளிப் பதக்கங்களுடனும் மற்றும் 200 வெண்கலப் பதக்கங்களுடன் 451 பதக்கங்களை குவித்து 7வது இடத்தில் உள்ளது.


கென்யா :


ஆப்பிரக்க நாடான கென்யா இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் 85 தங்கப்பதக்கங்கள், 75 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 77 வெண்கலப் பதக்கங்களுடன் 237 பதக்கங்கள் பெற்று 8வது இடத்தில் உள்ளனர்.


நைஜீரியா :




நைஜீரியா இதுவரை காமன்வெல்த் போட்டியில் 70 தங்கப்பதக்கங்கள், 75 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 91 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 236 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது.


வேல்ஸ் :


இங்கிலாந்து நாட்டின் அருகே உள் வேல்ஸ்  67 தங்கப்பதக்கங்கள், 98 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 141 வெண்கலப்பதக்கங்கள் வென்று மொத்தம் 306 பதக்கங்களுடன் 10வது இடத்தில் உள்ளது.


மற்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். குக் தீவு, சாலமோன் தீவு மற்றும் காம்பியா நாடுகள் தலா 1 பதக்கங்களுடன் கடைசி இடத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண