காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா மற்றும் அகுலா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.



CWG 2022 Table Tennis: டேபிள் டென்னிசில் ஆதிக்கம்..! பார்படாசை எளிதாக வீழ்த்திய இந்தியா..!


இந்த நிலையில், ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர்கள் டேபிள் டென்னிசில் அசத்தி வருகின்றனர். பார்படாஸ் அணிக்கு எதிராக ஆடும் இந்திய அணியினர் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர்கள் ஹிமா தேசாய், ஞானசேகரன், சரத்கமல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தி வெற்றி பெற்றுள்ளனர்.






இரட்டையர் பிரிவில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் தேசாய் மற்றும் ஞானசேகரன் பார்படாசின் பார்லி மற்றும் நைட்டை 3-0 என்ற கணக்கில் அசத்தலாக வென்றனர். அடுத்து நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் நட்சத்திரமான தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமலுடன் பார்படாசின் மேக்ஸ்வெல் மோதினார். இந்த போட்டியில் சரத்கமல் 3-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று அசத்தினார்.


அடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவிலும் இந்தியாவின் ஞானசேகரன் பார்படாசின் நைட்டை 3-0 என்ற நேர்சென் கணக்கில் வென்று அசத்தினார். இதனால், இந்திய அணியினர் பார்படாஸ் அணிக்கு எதிராக முதல் குரூப் போட்டியில் 3-0 என்று எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.  


மேலும் படிக்க : CWG 2022: நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்..! தங்கம் வெல்வாரா ஸ்ரீஹரி..?


மேலும் படிக்க : Watch Video: பதக்கம் வெல்வதே இலக்கு...! ஜிம்னாஸ்டிக் வீரர் யோகேஷ்வர்சிங் தீவிர ப்ராக்டீஸ்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண