இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் வரும் 28-ந் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டியைப் போன்று மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.


இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் தனலட்சுமி இருவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சுபாபி ஜார்ஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “சென்னையில் நடைபெற்ற போட்டியிலே ஐஸ்வர்யா நீளம் தாண்டும்போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ தவறாக இருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஏனென்றால் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாண்டுவது என்பது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். 6.73 மீட்டர் தாண்டுவது மிகவும் கடினம். அது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான் எனக்கு அப்படித் தோன்றியது.


இவர்கள் பல இளம் தடகள வீராங்கனைகளின் வாய்ப்பை சீரழிக்கின்றனர். இது மிகவும் தவறு. இதை இப்படியே விடக்கூடாது. நான் விளையாட்டில் இருந்தபோதே ஊக்க மருந்துக்கு எதிராக விழிப்புணர்வு செய்திருக்கிறேன். ஐஸ்வர்யா பெங்களூரில் எஸ்.ஏ.ஐ. வசதிகளுடன் பயிறசி எடுத்தவர். ஆனால், அவர் முகாமை அட்டென்ட் செய்ய தயாராக இல்லை. அதுதான் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.




ஐஸ்வர்யாவும், தனலட்சுமியும் காமன்லெவ்த் விளையாட்டு போட்டிகளில் அல்லது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு சென்று அங்கே ஊக்க மருந்து சோதனை கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டிற்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்..? இதனால்தான் ஏ.எப்.ஐ. தடகள போட்டியாளர்கள் கண்டிப்பாக தேசிய முகாம்களில் பங்கேற்க அறிவுறுத்துகிறது. ஊக்க மருந்து சோதனை செய்ய பல வழிகள் உள்ளது. ஆனால், சில ஏமாற்று பேர்வழிகள் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து ஏமாற்றுகின்றனர். இதனால், மிகவும் கடுமையான ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  அஞ்சுபாபி ஜார்ஜ் தேசிய அளவில் நீளம் தாண்டுதலில் பல பதக்கங்களை வென்றதுடன், உலக தடகள சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். 


மேலும் படிக்க : World Athetics Championships 2022: உலக தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அன்னு ராணி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண