காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 72 நாடுகளை சேர்ந்த சுமார் 5000 வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 


 


இந்நிலையில் இன்று வண்ணமையமான தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மன்ப்ரீத் சிங் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் இந்திய மூவர்ண கொடியை ஏந்தி செல்ல உள்ளனர். தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருகிறது. 


 






அந்த ஒத்திகையில் டிஜே ஒருவர் பஞ்சாபி பாடல் ஒன்றை போட்டு ரசிகர்களை உற்சாம் செய்து வருகிறார். இந்தப் பாடலை கேட்டதும் இந்திய ரசிகர்கள் சிலர் ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவில் இந்தப் பாடல் போடப்படும் என்று கருதப்படுகிறது. 


 


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிர்மிங்ஹமில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக பங்கு பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணியின் அட்டவணை:


ஜூலை 29- இந்தியா vs ஆஸ்திரேலியா


ஜூலை 31- இந்தியா  vs பாகிஸ்தான்


ஆகஸ்ட்-3-இந்தியா  vs பார்பேடாஸ்


ஆகஸ்ட்-6- அரையிறுதிப் போட்டி


ஆகஸ்ட்-7- இறுதிப் போட்டி


 




நேரலை:


காமன்வெல்த் போட்டிகள் அனைத்தும் சோனி நெட்வோர்க் செனலில் நேரலையில் வர உள்ளது. அத்துடன் இவை அனைத்தையும் சோனி லிவ் செயலியில் நேரடியாக காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண