ஒரு டச்சு உடற்பயிற்சி ஆர்வலர், ஹெலிகாப்டரில் தொங்கியபடியே ஒரு நிமிடத்தில் அதிக புல் அப்களை எடுத்து புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.


2022 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ஹோவெனென் ஏர்ஃபீல்டில் சக தடகள வீரர் அர்ஜென் ஆல்பர்ஸுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்டான் பிரவுனி, ​​இந்த சாதனையை படைத்துள்ளார்.


 






இரு தடகள வீரர்களும் இந்த சாதனையை முறியடிப்பதற்காக வாரக்கணக்கில் பயிற்சி எடுத்துள்ளனர். சாதனையை நிகழ்த்தியுள்ள பிரவுனி கால்ஸ்தெனிக்ஸ் நிபுணராக உள்ளார். அதாவது, ஒருவரின் உடல் தகுதியை மேம்படுத்தும் வகையிலான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் வழங்கும் நிபுணராக உள்ளார். சிறப்பாக செயல்பட்டு அனைவரின் மனதைக் கவரும் வகையில் 25 புல்-அப்களை எடுத்து உலக சாதனையை படைத்தார்.


சாதனையை முறியடிக்கும் வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "ஒரு நிமிடத்தில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிக புல் அப்களை யார் எடுக்க முடியும் என்பதற்காக இருவர் போட்டியிடுகின்றனர். யார் உலக சாதனையை படைக்க உள்ளனர்?" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 



உலக சாதனையை படைப்பதற்காக அவர்கள் எடுத்த பயிற்சியையும் முயற்சியையும் இருவரும் ஆவணப்படுத்தியுள்ளனர். ஆர்மீனியாவைச் சேர்ந்த ரோமன் சஹ்ரத்யான், இதற்கு முன்பு 23 புல்-அப்களை எடுத்திருந்தார். இதுவே உலக சாதனையாக இருந்தது. 


முதலில், 24 புல்-அப்களை எடுத்து ஆல்பர்ஸ் முதலில் சாதனை படைத்தார். ஒரு புல்-அப் அதிகமாக எடுத்து அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். இரண்டாவதாக போட்டியில் குதித்த பிரவுனி, ​​25 புல்-அப்களுடன் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 


 






உலக சாதனைக்கான பயிற்சியை பெற இரண்டு தடகள வீரர்களும் ஹெலிகாப்டரைக் 15 நாட்கள் தேடி அலைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண