காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் கானா அணியை 11-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 4-4 என்ற கணக்கில் டிரா செய்தது. 


 


இந்நிலையில் இன்று இந்திய அணி தன்னுடைய மூன்றாவது குரூப் போட்டியில் கனடா அணியை எதிர்த்து விளையாடியது.  இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் ஒரு சிறப்பான கோலை அடித்தார். இதன்காரணமாக இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அமித் ரோஹிதாஸ் மேலும் ஒரு கோலை அடித்தார். முதல் கால்பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 


 


இரண்டாவது கால்பாதியின் தொடக்கத்தில் 19வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதை இந்தியா கோல் அடிக்காமல் வீணடித்தது. அதன்பின்னர் 20வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணியின் லலீத் ஒரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜாந்த் சிங் ஒரு ஃபீல்ட் கோல் அடித்து அசத்தினார். இதன்காரணமாக இரண்டாவது கால்பாதியின் முடிவில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. 


மூன்றாவது கால்பாதியில் 38வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆகாஷ்தீப் சிங் அற்புதமாக ஒரு ஃபீல்ட் கோலை அடித்தார். அந்த கால்பாதியின் முடிவில் இந்திய அணி 5-0 என முன்னிலை பெற்றது. நான்காவது மற்றும் கடைசி கால் பாதியில் ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். அதன்பின்னர் 58வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மன்தீப் சிங் ஒரு அற்புதமான ஃபீல்ட் கோலை அடித்தார். இதன்காரணமாக இந்திய அணி 7-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் மேலும் ஒரு கோலை அடைத்தார். இதனால் இந்திய அணி 8-0 என்ற கணக்கில் கனடா அணியை வீழ்த்தியுள்ளது. இந்திய அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண