காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான 48கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து நார்தன் அயர்லாந்து நாட்டின் கிளைட் நிகோலை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நீத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


 


அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் இவர் அசத்தினார். இரண்டாவது சுற்றிலு நீத்தி அதிகமான புள்ளிகள் பெற்று இருந்தார். மூன்றாவது சுற்று தொடங்கும் போது நார்தன் அயர்லாந்து வீராங்கனை கிளைட் நிகோல் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால் இந்திய வீராங்கனை நீத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் காலிறுதிப் போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 


 






அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை இவர் உறுதி செய்துள்ளார். அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் இவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இன்று மாலை நடைபெறும் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில்இந்தியாவின் ஹூசாமுதுதீன் காலிறுதிப் போட்டியில் இன்று சண்டை செய்ய உள்ளார். இவரும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்து விடுவார். ஆகவே இந்தப் போட்டியையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல் இன்று நள்ளிரவு நடைபெறும் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் காலிறுதியில் விளையாட உள்ளார். அதேபோல் 70 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார். ஆடவர் பிரிவில் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரோகித் தக்காஸ் காலிறுதியில் விளையாட உள்ளார். இவர்கள் மூவரும் வெற்றி பெறும் பட்சத்தில் மேலும் சில பதக்கங்கள் இந்தியாவிற்கு உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண