இந்திய டேபிள் டென்னிசின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் சரத்கமல். நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணிக்காக ஆடவர் டேபிள் டென்னிஸ் குழுப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிசில் இங்கிலாந்து அணியுடன் போராடி தோல்வியடைந்தார்.
இருப்பினும், இறுதிப்போட்டி வரை முன்னேறி போராடி இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்திய ஜோடிகளான சரத்கமலும், சத்தியன் ஞானசேகரனும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினர்.
2010ம் ஆண்டு முதல் காமன்வெல்த் தொடரில் ஆடும் சரத்கமல் காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெல்லும் நான்காவது பதக்கம் இதுவாகும். அதாவது, 2010ம் ஆண்டு முதல் அவர் காமன்வெல்த்தில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சரத்கமல் 2010ம் ஆண்டு ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
2014ம் ஆண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். 2018ம் ஆண்டு வெள்ளி வென்றார். நடப்பு காமன்வெல்த் போட்டித் தொடரிலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். 2018ம் ஆண்டு முதல் காமன்வெல்த்தில் ஆடி வரும் சத்தியன் ஞானசேகரன் தற்போது இரண்டாவது வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். அவர் 2018ம் ஆண்டு ஆடவர் இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிசில் வெள்ளியையும், 2022ம் ஆண்டு வெள்ளியையும் வென்று அசத்தினார்.
காமன்வெல்த் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு காமன்வெல்த் போட்டித் தொடரில் ஒரே பிரிவில் (ஆடவர் இரட்டையர்) தொடர்ந்து நான்கு முறை வென்ற வீரர் என்ற அரிய சாதனையை சரத்கமல் படைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்