Commonwealth Games 2022 Day 9 Highlights : காமன்வெல்த் போட்டியின் நேற்றைய 9வது நாளில் இந்திய வீரர்கள் ரவி தஹியா, வினேஷ் போகட், நவீன் குமார் மற்றும் பவினா படேல் ஆகியோர் இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை வென்றனர். அதே நேரத்தில், இந்தியாவிற்கு மூன்று வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களைக் குவித்து மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றியது. இதுவரை பர்மிங்காம் 2022 தொடரில் நேற்றைய நாள் இந்தியாவிற்கு இது சிறந்த நாளாக அமைந்தது.
மல்யுத்த வீரர்கள் 6 தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்றனர் :
ஆண்களுக்கான 57 கிலோ பிரிவில் ரவி தஹியா, 53 கிலோ பிரிவில் வினேஷ் போகட் மற்றும் 74 கிலோ பிரிவில் நவீன் குமார் தங்கம் வென்றனர். இவர்களைத் தவிர, மல்யுத்த வீரர்களான தீபக் நெஹ்ரா, பூஜா கெலாட் மற்றும் பூஜா சிஹாக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி :
காமன்வெல்த் பெண்களுக்கான அரையிறுதி போட்டியில் நேற்று இந்திய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதிக்கொண்டனர். இதில் இங்கிலாந்து அணியை 4 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.
தடகளத்தில் வெள்ளி :
காமன்வெல்த் பெண்களுக்கான 10 கிமீ ஓட்டப் பந்தயத்தில் பிரியங்கா கோஸ்வாமியும், ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர்.
இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி :
3-2 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆண்கள் ஹாக்கி அணி. இறுதிப் போட்டியில், மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நான்கு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் :
சாகருக்கு முன், நிது கங்காஸ், நிகத் ஜரீன் மற்றும் அமித் பங்கல் ஆகியோர் அந்தந்த எடைப் பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். மூன்று இந்தியர்கள், முகமது ஹுசாமுதீன், ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ரோஹித் டோகாஸ் ஆகியோர் பிரிந்த முடிவில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்தை தக்க வைத்து கொண்டனர்.
ஷரத் கமல் :
சத்தியன் கணசேகரனுடன் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலாவுடன் இணைந்து அச்சந்த ஷரத் கமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கமல் தனது ஒற்றையர் ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஸ்ரீஜா பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனைக்கு எதிராக ஏழு செட்களில் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்திற்காக முயற்சி செய்ய இருக்கிறார். சத்தியன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்